முதல் மாத சம்பளத்தை தற்கொலை செய்து கொண்ட பெண்ணின் குழந்தைகளுக்கு வழங்கிய அதிமுக எம்.எல்.ஏ

கரூர் அருகே தீயினால் பாதிக்கப்பட்ட இளம் பிஞ்சு குழந்தைகளுக்கு, கிருஷ்ணராயபுரம் தொகுதி அ.தி.மு.க. எம்.எல்.ஏ. காமராஜ், தனது முதல் மாத சம்பளம் ரூ 50,000 த்தை வழங்கி உதவியுள்ளார்.

கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் (தனி) தொகுதி கடவூர் பஞ்சாயத்து யூனியனுக்குட்பட்ட நாயக்கனூர் பகுதியை சேர்ந்தவர் பூமி ராஜன் (35) விவசாய கூலி வேலை செய்து வருகிறார். இவரது மனைவி கற்பகம் (28). இவர்களுக்கு சுமதி (10) ரம்யா (7) ஈஸ்வரி ( 4) என்ற குழந்தைகள் உள்ளனர்

இந்த நிலையில், கடந்த சில வருடமாக வயிற்றுவலியால் துடித்து வந்தார் கற்பகம். இதனால் மனமுடைந்த கற்பகம், கடந்தாண்டு ஜூலை 3 ம் தேதி, தனது குழந்தைகள் சுமதி , ரம்யா , ஈஸ்வரி ஆகியோர் மேல் மண்ணெண்ணய் ஊற்றி தீ வைத்தார். பின்பு தானும் மண்ணெண்ணய் ஊற்றிக் கொண்டு தீ வைத்துக் கொண்டார். இதில், கற்பகம் மற்றும் சுமதி ஆகியோர் பரிதாபமாக இறந்தனர்.

இதில் ரம்யா, ஈஸ்வரி ஆகிய buy Lasix online குழந்தைகள் பலத்த தீக்காயம் அடைந்தனர். இதனால் மேல் சிகிச்சைக்காக தவித்து வந்தனர்.

இந்த நிலையில் கடந்த ஏப்ரல் மாதம் நாயக்கனூர் பகுதிக்கு தேர்தல் பிரச்சாரத்துக்குச் சென்ற கிருஷ்ணராயபுரம் அ.தி.மு.க., வேட்பாளர் காமராஜ், தீக்காயம் அடைந்த குழந்தைகளின் நிலை அறிந்து, தேர்தலுக்கு பிறகு உதவி செய்வதாக உறுதி கூறியுள்ளார்.

அன்படியே தேர்தலில் வெற்றி பெற்ற பின்பு செம்மநத்தம் பஞ்சாயத்து நாயக்கனூரில் காமராஜ், எம்.எல்.ஏ. நன்றி தெரிவிக்கச் சென்றார். அப்போது, தனது முதல் மாத சம்பளம்,ரூ 50,000 ஐ தீக்காயம் அடைந்த ரம்யா, ஈஸ்வரி ஆகிய குழந்தைகளிடம் ஊர் மக்கள் முன்னிலையில் வழங்கினார். இந்த காட்சிக் கண்ட கிராம மக்கள் அனைவரும் கண்ணீர் விட்டு சிறுது நேரம் அழுதனர்.

Add Comment