கடையநல்லூர் பகுதியில்வேளாண் அதிகாரி ஆய்வு

கடையநல்லூர் வட்டாரத்தில் தென்னை செயல் விளக்க பண்ணையினை வேளாண்மை இணை இயக்குநர் ஆய்வு செய்தார்.கடையநல்லூர் வட்டாரத்தில் நயினாரகரம் கிராம பகுதியில் தென்னை வளர்ச்சி வாரிய திட்டத்தின் கீழ் செயல் விளக்க பண்ணை அமைக்கப்பட்டுள்ளது. இந்த பண்ணையினை நெல்லை மாவட்ட வேளாண்மை இணை இயக்குநர் தேவசகாயம் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இடு பொருட்களான இயற்கை buy Bactrim online உரம், ரசாயன உரங்கள், தொழில்நுட்ப முறையின்படி கையாளப்பட்ட செயல்பாடுகளையும், பயிர் பாதுகாப்பு மற்றும் களை கட்டுப்பாடு, உழவுப்பணி, ஊடுபயிர் செலவினம் செய்த விபரங்களையும் பார்வையிட்டு தொடர்ந்து தொழில் நுட்பங்களை கடைபிடித்து உற்பத்தி திறனை அதிகரிக்க அறிவுறுத்தினார்.

மேலும் தென்னையில் ஊடுபயிர்களாக தக்கைபூண்டு மற்றும் பால்சேம்பு சாகுபடி செய்ததையும் பார்வையிட்டார். கடையநல்லூர் வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் பெருமாள் தென்னைக்கு உரமிடும் முறையை செயல்விளக்கமாக செய்து காண்பித்தார். துணை வேளாண்மை அலுவலர் லெட்சுமிநாராயணன் தென்னை பயிர் பாதுகாப்பு செய்யும் முறைகளை செயல்விளக்கமாக செய்தார்.

இதற்கான ஏற்பாடுகளை உதவி வேளாண்மை அலுவலர்கள் முருகன், காமாட்சிநாதன் செய்திருந்தனர். தொடர்ந்து வேளாண்மை இணை இயக்குநர் தேவசகாயம் நயினாரகரம், நெடுவயல் மற்றும் காசிதர்மம் ஆகிய கிராமங்களில் சாகுபடி செய்துள்ள சோளம் இறவைப்பயிர்களை பார்வையிட்டு உரிய மேலாண்மை முறைகளை கடைபிடிப்பதோடு, மாவட்ட அளவிலான பயிர் விளைச்சல் போட்டியில் விவசாயிகளை பங்கு கொள்ள கேட்டுக் கொண்டார்.

Add Comment