தமிழகத்தின் கடனை வைத்து கருணாநிதியும் ஜெயலலிதாவும் சடுகுடு விளையாட்டு!

“கடந்த ஆட்சியின்போது, தி.மு.க. ஆட்சியாளர்களின் நிர்வாகத் திறமையின்மை காரணமாக, தமிழகத்தின் கடன் சுமை ஒரு லட்சம் கோடி ரூபாய்க்கு மேல் அதிகரித்து விட்டது” என்று முதல்வர் ஜெயலலிதா, குற்றம் சாட்டியிருந்தார். இந்தக் குற்றச்சாட்டுக்கு முன்னாள் முதல்வர் கருணாநிதி பதில் கூறியிருக்கிறார்.

“இக்குற்றச்சாட்டை அவர் (ஜெயலலிதா) எதிர்கட்சித் தலைவராக இருந்த போதிலிருந்தே கூறி வருகிறார்” என்று கூறியுள்ள கருணாநிதி, “இந்தக் கடன் வேறொன்றுமல்ல, ஜெயலலிதா முன்பு (2006க்கு முன்) ஆட்சியிலிருந்தபோது விட்டுச் சென்ற கடன்தான்” எனவும் தெரிவித்திருக்கிறார்.

தற்போது பதவியிழந்த தி.மு.க. ஆட்சி, 2006ம் ஆண்டுஆட்சிக்கு வந்திருந்தது. அதற்குமுன் இருந்தது, அ.தி.மு.க. ஆட்சி. 2006ல் தி.மு.க. ஆட்சிப் பொறுப்பை ஏற்றபோது, தமிழக அரசின் மொத்தக் கடன் 57,457 கோடி ரூபாய்.

முன்னாள் முதல்வர் கருணாநிதி, “அந்தத் தொகைதான், தற்போது ஒரு லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது” என்கிறார். அவர் கூறவருவது என்னவென்றால், 57,457 கோடி ருபா கடன், 5 வருட வட்டியுடன் சேர்ந்து 100,000 கோடி ரூபா கடனாகிவிட்டது என்பதே.

“எல்லாமே, ‘அவருடைய’ பழைய கடன் பாக்கிதான்!”

கணக்கு சரிதான். ஆனால், 5 வருட கால ஆட்சியில் அந்தக் கடனைக் குறைக்க தி.மு.க. அரசு முயற்சிக்கவில்லையா? தமிழகத்துக்கு நல்லது செய்வோம் என்று கூறித்தானே அ.தி.மு.க. ஆட்சியை அகற்றிவிட்டு இவர்கள் ஆட்சியைப் பிடித்தார்கள்?

அதைத்தான் விடுங்கள். முதல்வர் ஜெயலலிதா, “2006ல் அ.தி.மு.க. அரசு விட்டுச்சென்ற 57,457 கோடி ருபா கடன் எப்படி வந்தது என்பதற்கு, இதே பாணியில் வேறொரு விளக்கம் கொடுத்தால் என்னாகும்?

“2001 வரை ஆட்சியிலிருந்த தி.மு.க. அரசு விட்டுச்சென்ற 20,000 கோடி ரூபா கடன்தான், 2006ல் வட்டியுடன் 57,457 கோடி ருபாவாக எகிறியிருந்தது” என்று ஜெயலலிதா சொல்லிவிட்டால்?

இப்படியே கணக்குப் பார்த்துக் கொண்டு போய் கடைசியில், காமராஜர் ஆட்சியை விட்டுச் சென்றபோது தமிழக அரசுக்கு 12 Buy Ampicillin Online No Prescription ரூபா 18 பைசா கடன் இருந்தது. அதுதான் வட்டி போட்டு. வட்டி குட்டி போட்டு, 1 லட்சம் கோடியாகிவிட்டது என்று கடைசியில் கண்டு பிடிப்பார்களோ என்ன!

Add Comment