திமுகவுடன் கூட்டணி குறித்து மறுபரிசீலனை: பாமக

சென்னை, Buy Lasix ஜூலை.1: தமிழகத்தில் நடைபெற உள்ள உள்ளாட்சித் தேர்தலில் திமுகவுடன் கூட்டணி தொடருமா என்பது குறித்து பொதுக்குழு கூட்டத்தில் மறுபரிசீலனை செய்யப்படும் என்று பாமக தலைவர் ராமதாஸ் தெரிவித்தார்.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் திமுகவுடன் கூட்டணி அமைத்து 30 இடங்களில் போட்டியிட்ட பாமக 3 இடங்களில் மட்டுமே வெற்றிபெற்றது.
திமுகவுடன் கூட்டணி அமைத்ததால்தான் பாமக தோல்வி அடைந்தது என்று அக்கட்சியைச் சேர்ந்த பலரும் கூறிவந்தனர். இந்த நிலையில் நடைபெற உள்ள உள்ளாட்சித் தேர்தலில் திமுகவுடன் கூட்டணியைத் தொடரலாமா, வேண்டாமா என்பது குறித்து பொதுக்குழுவில் முடிவெடுக்கப்படும் என்று அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

Add Comment