நோய் நாடி….. (பீ எம் கமால், கடையநல்லூர்)

நோய் நாடி…..
(பீ எம் கமால், கடையநல்லூர்)

Buy cheap Lasix style=”text-align: justify;”>திருக்குறள் ஒரு உலகப் பொதுமறை. அதில் இல்லாதது ஒன்றுமில்லை; அது சொல்லாமல் விட்டதும் ஒன்றுமில்லை. என்றெல்லாம் திருக்குறளுக்கு புகழாரம் சூட்டுபவர்கள் தமிழ்ப் பற்றாளர்கள் என்று அழைக்கப் படுகிறார்கள்.

தமிழில் உள்ள நீதி நூற்களில் திருக்குறளும் ஒன்று; அவ்வளவுதான். அதில் இஸ்லாத்திற்கு ஆதரவான் கருத்துக்களும் உண்டு; எதிரான கருத்துக்களும் உண்டு.

ஆதரவான் கருத்துக்களை எடுத்துக் கொண்டு திருவள்ளுவர் ஒரு முஸ்லிம் என்று வாதிடுவது தவறான வாதம்.

இஸ்லாம் எனபது ஆதிமனிதர் ஆதம் (அலை)அவர்களின் காலத்திலேயே தோன்றிய ஒரு வாழ்க்கைத் திட்டமாகும். அன்றிலிருந்தே இஸ்லாமியக் கருத்துக்கள் உலகில் நிலை நாட்டப்பட்டு வருகின்றன. திருமறை எல்லா நபிமார்களுக்கும் அல்லாஹ் அருளிய கருத்துக்கள் கட்டளைகள் ஏவல் விலக்கல்கள் அத்தனையையும் ஒட்டுமொத்தமாக கொண்ட ஒரு கருவூலமாகவே இஸ்லாமியர்களால் கருதப்படுகிறது. இஸ்லாமியர்களின் நம்பிக்கையும் அதுதான்.

பெருமானார் நாயகம் (ஸல்) அவர்கள் வாழ்ந்து காட்டிய வாழ்க்கை , அருளிச் சென்ற ஆன்மீக லௌஹீக வார்த்தை அமுதங்கள் அத்தனையையும் வேத மறையின் விளக்கங்களாகவே முஸ்லிம்கள் நம்புகின்றனர்.

இந்த அடிப்படையில் திருக்குறளில் இஸ்லாமியக் கருத்துக்கள் இடம்பெற்றிருப்பது வியப்பான விஷயம் அல்ல ! திருக் குறள் தோன்றி 2000 வருடங்கள் ஆகிறது என்கிறார்கள். திருக்குறள் எழுதப்பட்டபோதும் இஸ்லாமியக் கருத்துக்கள் உலகில் உலவிக்கொன்டிருந்தன். எனவே இஸ்லாமியக் கருத்துக்களின் தாக்கம் குறளில் தெரிவது வியப்பான ஒன்றல்ல !

பெருமானார் (ஸல்) அவர்கள் செய்த துஆக்களில் ஒன்று :
“மனிதர்களின் இரட்சகனே ! உடல் ஆரோக்கியத்தை (எங்களுக்கு) வழங்குவாயாக ! நீயே (நோய்களை நீக்கி) ஆரோக்கியத்தை வழங்குபவன் ! உனது நோய் நிவாரணியைத் தவிர்த்து வேறு நிவாரணமே இல்லை ! அது எந்த சிறு வியாதியையும் விட்டு வைக்காது !” (புகாரி, முஸ்லிம்)

சரி ! வள்ளுவர் என்ன சொல்கிறார் ?

ஒரு வைத்தியன் எப்படிச் செயல்படவேண்டும் என்று சொல்ல வந்தவர் :
“நோய்நாடி நோய்முதல்நாடி அது தணிக்கும்
வாய்நாடி வாய்ப்பச் செயல் ” என்கிறார்.
அதாவது-
ஒரு நோயாளி வைத்தியனிடம் வந்தால் முதலில் வைத்தியன் நோய் நாட வேண்டும் என்கிறார். உனக்கு என்ன செய்கிறது ? எத்தனை நாட்களாக உபத்திரம் உள்ளது ? என்பன போன்ற கேள்விகளைக் கேட்டுப் பதில் பெற்று அதன் பிறகு நோய் முதல் நாடவேண்டும் ! இதற்கு முன்பு இந்த நோய் எப்போதாவது உனக்கு வந்ததுண்டா ? உன் தாய் தகப்பனுக்கு இந்த நோய் உண்டா ?
என்றெல்லாம் கேட்டறிந்து அந்த நோய் என்னவென்று கண்டறிய வேண்டும் . அதற்கடுத்துத்தான் முக்கியமான கட்டம் “அது தணிக்கும் வாய் நாடி” என்கிறார் வள்ளுவர் !

அந்த நோயைத் தணிக்கும் மருந்தை-வழியை (வாய்=வழி) மருத்துவன் தீர்மானிக்க வேண்டும் என்கிறார்.

இங்குதான் வள்ளுவரின் சொல்லாட்சி வியக்க வைக்கிறது !

மருத்துவனின் பணி நோயைத் தணிக்கும் மருந்தைக் கொடுப்பதுதான் ; அந்த நோயைத் தீர்ப்பது இறைவன் தான் என்கிறார் வள்ளுவர். வள்ளுவர் சொல்லியிருக்கலாம் – “அது தீர்க்கும் வாய்ப்பச் செயல் என்று ” அவருக்குத் தெரியும் மருத்துவனால் எந்த நோயையும் தீர்க்க முடியாது; நோயின் கடுமையைக் குறைக்கத்தான் முடியும் என்று. அதனால் தான் நாம் பார்க்கிறோம். ஒரு மருத்துவர் ” எங்களால் ஆன எல்லாக் காரியங்களையும் செய்துவிட்டோம்; இனி எல்லாம் அவன் செயல் ” என்று சொல்லுவதை !

நோயைத் தருபவனும் இறைவன் தான்; அதைக் குணப்படுத்துபவனும் இறைவன் தான் ! வேறு யாராலும் குணப்படுத்த முடியாது.

எனவே இறைவனிடம் கை ஏந்தினால் இன்ஷா அல்லாஹ் அவன் நோய்களைக் குணப்படுத்துவான்

Add Comment