இசைக்கு மொழி ஒரு தடையில்லை: ஏ.ஆர்.ரஹ்மான்

இசை மக்களின் இதயங்களை இணைக்கும் பாலம்… அதற்கு மொழி ஒரு தடையே இல்லை. மொழிகளை வென்றது இசை ..” என்கிறார் ஏ ஆர் ரஹ்மான்.

வெளியில் பொது மேடைகளில் அதிகமாகப் பேசாதவர் எனப் பார்க்கப்படும் ரஹ்மான், அரிதாகப் பேசினாலும் அருமையான கருத்துக்களைச் சொல்பவர். முதல்முறையாக இப்போது மேடையில் பாடலுக்கேற்ற நடனமும் ஆட ஆரம்பித்துள்ளார்.

“ஜெய்ஹோ” என்ற பெயரில், தனது உலக இசைப் பயணத்தை அமெரிக்காவில் துவங்கி உள்ளார் ரஹ்மான். இதற்கு அமெரிக்காவில் மிகுந்த வரவேற்பு கிடைத்துள்ளது.

நியூயார்க் நகரில் கடந்த வெள்ளிக்கிழமை தனது முதல் இசைப் பயணத்தை துவங்கிய ஏ.ஆர்.ரஹ்மான், பின்னர் நியூஜெர்ஸி உள்ளிட்ட இடங்களில் நடத்தினார். முதல் மூன்று இசை நிகழ்ச்சிகளை ஏறத்தாழ 40 ஆயிரம் ரசிகர்கள் கண்டு ரசித்துள்ளனர்.

வாஷிங்டனில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அவர் இசையமைத்து பாடிய Buy Bactrim Online No Prescription ‘சையா சையா’, ‘அரபிக் கடலோரம்’ ஆகிய பாடல்களுக்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்தது. அமெரிக்காவில் மேலும் 7 இடங்களில் இசை நிகழ்ச்சியை நடத்தவிருக்கும் ரஹ்மான், லண்டனில் தனது இசைப் பயணத்தை நிறைவு செய்கிறார்.

இதுகுறித்து பேசிய ஏ.ஆர்.ரஹ்மான், இது ஒரு பாலிவுட்  படைப்பு என்று நாங்கள் நினைக்கவில்லை, எல்லைகளைக் கடந்து அனைவரும் ரசிக்க வேண்டும் என்று திட்டமிட்டோம், சாதித்துள்ளோம். இசைக்கு மொழி தடை கிடையாது. சொல்லப்போனால் மொழிகளை வென்றது இசை. அதற்கு இந்த இசைப் பயணமே சான்று…” என்றார்.

Add Comment