துபாயில் முன்னணி நிறுவனத்தில் பணி சென்னையில் 4ம் தேதி நேர்முக தேர்வு

துபாயில் முன்னணி நிறுவனத்தில் பல்வேறு பணியிடங்களுக்கு சென்னையில் வரும் 4ம் தேதி நேர்முக தேர்வு நடக்கிறது. துபாயில் உள்ள ஒரு முன்னணி நிறுவனத்திற்கு 2 ஆண்டுகள் அனுபவத்துடனும், 33 வயதுக்கு உட்பட்ட பி.இ எலக்ட்ரிக்கல் தேர்ச்சி பெற்ற ஸ்பெஷாலிட்டி இன்ஜினியர் மற்றும் மேற்பார்வையாளர்கள், 3 ஆண்டுகள் அனுபவத்துடன் டிப்ளமோ தேர்ச்சி பெற்ற எலக்ட்ரிக்கல், மெக்கானிக்கல், பிளம்பிங், எலக்ட்ரானிக்ஸ், எச்.பி.ஏ.சி மேற்பார்வையாளர்கள், பிம்ஸ் ஆபரேட்டர்கள், ஐ.டி.ஐ தேர்ச்சி பெற்ற எலக்ட்ரீசியன்கள், பிளம்பர்கள், சென்டிரிங் கார்பென்டர்கள், ஏ.சி டெக்னீசியன்கள், கொத்தனார் மற்றும் பெயிண்டர்கள் தேவைப்படுகின்றனர்.

ஐ.டி.ஐ இல்லாதவர்கள் அரபு நாடுகளில் Buy Bactrim 2 ஆண்டுகள் அனுபவம் இருந்தால் போதுமானது. எனவே, தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள் சுய விபரங்கள் அடங்கிய விண்ணப்பத்துடன் கல்வி, அனுபவம் ஆகியவற்றின் நகல்கள், ஒரிஜினல் பாஸ்போர்ட் மற்றும் வெள்ளை நிற பின்னணியில் எடுக்கப்பட்ட 4 போட்டோக்களுன் “”48, டாக்டர் முத்துலட்சுமி சாலை, அடையாறு, சென்னை – 20” என்ற முகவரியில் அமைந்துள்ள தமிழக அரசு நிறுவனமான அயல் நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனத்தில் வரும் 4ம் தேதி காலை 10 மணிக்கு நடக்கும் நேர்முக தேர்வுக்கு வர வேண்டும்.

மேலும் விபரங்கள் அறிய அலுவலக முகவரியிலோ மற்றும் 044-24464268/24464269 என்ற டெலிபோன் எண்களில் தொடர்பு கொள்ளலாம் அயல் நாட்டு வேலைவாய்ப்பு நிறுவன நிர்வாக அலுவலர் தெரிவித்தார்.

Add Comment