கடையநல்லூர் தொகுதி மக்களுக்கு அறிவித்த வாக்குறுதிகள் நிறைவேற்ற ஏற்ப்படும் மேற்கொள்ளப்படும்-செந்தூர்பாண்டியன்

அமைச்சர் பதவி மூலம் தமிழக மக்களுக்கு பணி செய்யும் வாய்ப்பை முதல்வர் ஜெயலலிதா வழங்கியுள்ளதாக எம்எல்ஏ., செந்தூர்பாண்டியன் தெரிவித்துள்ளார். கடையநல்லூர் தொகுதி எம்எல்ஏ., செந்தூர் பாண்டியனை முதல்வர் ஜெயலலிதா அமைச்சராக அறிவித்துள்ளார். தமிழக கதர் மற்றும் கிராம தொழில்துறை அமைச்சராக இன்று (4ம் தேதி) பதவியேற்க உள்ள செந்தூர்பாண்டியன் கூறுகையில், “”தமிழகத்தில் மக்கள் நலனுக்காக முதல்வர் ஜெயலலிதா மேற்கொண்டு வரும் அனைத்து நடவடிக்கைகளுக்கு பொதுமக்கள் பாராட்டு தெரிவித்து வருகின்றனர். கடையநல்லூர் தொகுதி மக்களுக்கு தேர்தல் காலத்தில் அறிவித்த வாக்குறுதிகள் அனைத்தும் நிறைவேற்றும் வகையில் அனைத்து ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்படும்.

முதல்வர் ஜெயலலிதாவால் வழங்கப்பட்டுள்ள அமைச்சர் பதவி மூலம் தமிழக மக்களுக்கு சேவை செய்யும் வாய்ப்பு கிடைத்துள்ளது” என்றார். கடையநல்லூர் எம்எல்ஏ., செந்தூர் பாண்டியனுக்கு அமைச்சர் பதவி வழங்கப்பட்டதை கொண்டாடும் வகையில் அதிமுகவினர் கடையநல்லூர் பகுதியில் பட்டாசு வெடித்து, பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கினர். அமைச்சர் பதவி ஏற்கவுள்ள செந்தூர்பாண்டியனுக்கு முன்னாள் அமைச்சர் நாகூர்மீரான், மாநில விவசாய அணி துணை செயலாளர் ஆனைக்குட்டி பாண்டியன், முன்னாள் எம்.எல்.ஏ., நயினாமுகம்மது, சாம்பவர்வடகரை டவுன் பஞ்.,துணைத் தலைவர் மூர்த்தி, சண்முகசுந்தரம், தொகுதி செயலாளர் மாரியப்பன், ஒன்றிய செயலாளர்கள் முத்துப்பாண்டி, செல்லப்பன், நகர செயலாளர்கள் கிட்டுராஜா, தங்கவேலு, தொகுதி இணை செயலாளர்கள் வி.பி.நடராஜன், எல்ஐசி முருகையா, சவுக்கை வெங்கடேசன், கார்த்திகை செல்வன், டாக்டர் சுசீகரன், காத்தவராயன்,ரஜப், அச்சன்புதூர் டவுன் பஞ்.,தலைவர் அயூப், செங்கோட்டை துணை செயலாளர் ராஜா, செங்கோட்டை ஒன்றிய மாணவரணி செயலாளர் முருகேசன், குருசாமி, பண்பொழி திருமலைக்குமாரசுவாமி கோயில் Levitra online முன்னாள் திருப்பணிக்குழு தலைவர் அருணாசலம், ராசா கன்ஸ்ட்ரக்ஸன்ஸ் பொது மேலாளர் ரவிராஜா உட்பட பலர் வாழ்த்து தெரிவித்தனர்.

Add Comment