உல்லாசத்துக்கு இடையூறாக இருந்ததால் கொன்றோம்: மனைவி

நெல்லை அருகே உள்ள ராமையன்பட்டி சிவாஜி நகரை சேர்ந்தவர் பால்ராஜ் (வயது 36). அரசு டாஸ்மாக் மதுக்கடையில் விற்பனையாளராக வேலை பார்த்து வந்தார். இவரது மனைவி சிவகாமி (30). இவர் நெல்லை ரெயில்வேயில் பிளாட்பாரங்களை துப்புரவு செய்யும் வேலை செய்து வந்தார்.

இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். Viagra online இந்தநிலையில் கடந்த 3.5.11 அன்று பூட்டிய வீட்டில் பால்ராஜ் விஷம் குடித்த நிலையில் பிணமாக கிடந்தார். அவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டதாக மானூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

சமீபத்தில் அவரது பிரேத பரிசோதனை முழு விபரம் போலீசாருக்கு கிடைத்தது. அதில் விஷம் குடித்ததால் பால்ராஜ் சாகவில்லை என்றும், மூச்சுத்திணறல் ஏற்பட்டு இறந்துள்ளார் என்றும், இறந்த பிறகு அவரது வாயில் ஊற்றிய விஷம் தொண்டை வரை மட்டுமே சென்றுள்ளது என்றும் கூறப்பட்டு இருந்தது.

இதைத்தொடர்ந்து தற்கொலை வழக்கு கொலை வழக்காக மாற்றப்பட்டது. மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு விஜயேந்திர பிதரி, துணை சூப்பிரண்டு கனகராஜ் உத்தரவின் பேரில் மானூர் இன்ஸ்பெக்டர் கண்ணன், சப்- இன்ஸ்பெக்டர் பழனி மற்றும் போலீசார் தீவிர விசாரணை நடத்தினார்கள்.

கொலை செய்யப்பட்ட பால்ராஜின் மனைவி சிவகாமி, பால்ராஜின் உடன்பிறந்த தம்பி அன்புராஜ் ஆகிய 2 பேரையும் தனிப்படை போலீசார் நேற்று கைது செய்தனர். போலீசார் விசாரணையில் அவர்கள் பரபரப்பு வாக்குமூலம் அளித்தனர்.

அதன் விபரம் வருமாறு:-

கடந்த சில மாதங்களுக்கு முன்பு பால்ராஜுக்கு விபத்து ஏற்பட்டது. அப்போது நாங்கள் இருவரும் அருகில் இருந்து கவனித்தோம். இதில் எங்களுக்கு இடையே கள்ளத்தொடர்பு ஏற்பட்டது. பால்ராஜ் சுகம் பெற்று வீடு திரும்பிய பிறகும் நாங்கள் தனியாக சந்தித்து உல்லாசமாக இருப்போம்.

இந்த விபரம் பால்ராஜுக்கு தெரிந்து சத்தம் போட்டார். அன்புராஜை வீட்டுக்கு வரக்கூடாது என்றும் கூறினார். எங்களது உல்லாசத்துக்கு இடையூறாக இருந்ததால் நாங்கள் இருவரும் சேர்ந்து தலையனையால் அவரது முகத்தை அமுக்கி கொலை செய்தோம்.

பின்னர் அவரது வாயில் விஷத்தை ஊற்றிவிட்டு தற்கொலை செய்தது போல் வைத்துவிட்டு கதவை பூட்டி சாவியை உள்ளே வீசிவிட்டோம். பின்னர் குழந்தைகளுடன் வீரவநல்லூரில் உள்ள மாமா வீட்டுக்கு சென்றுவிட்டோம். ஆனால் போலீசார் எங்களை கைது செய்துவிட்டனர்.

இவ்வாறு அவர்கள் வாக்குமூலத்தில் கூறியுள்ளனர்

Add Comment