ஓரினச்சேர்க்கையில் ஈடுபட முனைந்த பாதிரி கேமராவில் பதிவு

இத்தாலியை சேர்ந்த பாதிரி ஓருவர் இளைஞர் ஒருவரிடம் ஓரினச் சேர்க்கைக்காக அணுகியதை ஒரு தொலைக்காட்சி சேனல் ரகசியமாகப் பதிவுச் செய்துள்ளது. இதனையடுத்து அவர் தற்காலிகப் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். இதனை ANSA செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ளது.

இத்தாலியில் Cialis online மிலன் பகுதியிலுள்ள ஓர் இளைஞர் கடந்த ஏப்ரல் மாதம் ஒரு தொலைக்காட்சிச் சேனலில் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார் கராவாகியோ (Caravaggio) என்ற பகுதியை சேர்ந்த 51 வயதுள்ள பாதிரியிடம் தான் தனது பிரச்சனைகளுக்காக ஆலோசனை கேட்கச் சென்றதாகவும், அந்த சமயத்தில் அவர் ஓரினச்சேர்க்கைக்காக தன்னை அழைத்ததாகவும் அந்த இளைஞர் தொலைக்காட்சியில் கூறினார்.

இதனையடுத்து அந்த தொலைக்காட்சி சேனல் ஓர் இளம் நடிகரை அவரிடம் சென்று ஓரினச்சேர்க்கையில் ஆர்வம் உள்ளது போல நடிக்கச் சொன்னது அத்தோடு அந்த நிகழ்வை கேமராவிலும் ரகசியமாக படம் பிடித்தது.

அந்த பாதிரி கடந்த காலங்களில் ஓரினச்சேர்க்கையில் ஈடுபட்ட அனுபவம் உண்டு என்று கூறினார். அத்தோடு அந்த இளம் நடிகரை பாதிரி முத்தம் இட முனைந்ததும் கேமராவில் பதிவாகியுள்ளது என்று ANSA செய்தி நிறுவனம் கூறுகின்றது.

இதனையடுத்து அந்த நிகழ்வு தொலைக்காட்சியில் ஒளிபரப்பானது, பாரதியாரிடம் இதற்கான விளக்கமும் கேட்கப்பட்டது.

“நான் அந்த இளைஞருக்கு உதவி செய்யத்தான் முனைந்தேன், எனக்கு என்ன நடந்தது என்று தெரியவில்லை” என்று அவர் கூறியுள்ளார்.

இந்த நிகழ்ச்சி அந்த தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டது. ஆனால் அந்த செயலில் ஈடுபட்ட பாதிரி யார் என்று சொல்லப்படவில்லை.

ரோம் கத்தோலிக்க சபை அந்த பாதிரியாரின் மேலுள்ள குற்றச்சாட்டு தெளிவடையும் வரை அவரைத் தற்காலிகமாக பணி நீக்கம் செய்துள்ளது.

Add Comment