உயிரோடு எரித்துபெண் கொலை

திருக்கோவிலூர் அருகே உள்ள அரகண்டநல்லூர் கொட்டாமேடு பகுதியை சேர்ந்தவர் ரவி. நெல் வியாபாரி. இவரது மனைவி துர்க்கா (29). இவர்களுக்கு திருமணமாகி 10 வருடமாகிறது. 2 குழந்தைகள் உள்ளனர்.

திருமணத்தின் போது 25 பவுன் நகையும், ரூ.5 லட்சம் சீர்வரிசையும் வழங்கப்பட்டது. மேலும் ரூ.2 லட்சம் வாங்கி வரும்படி துர்க்காவை ரவி வற்புறுத்தியதாக கூறப்படுகிறது.

இதை யொட்டி துர்கா தன் பெற்றோர் வீட்டுக்கு சென்று கேட்டார். அவர்கள் தற்போது பணம் இல்லை என்று கூறிவிட்டார்கள். இதையொட்டி துர்க்கா நேற்று மதியம் தன் வீட்டுக்கு வந்து கணவரிடம் கூறினார்.

பின்னர்ரவி கோபம் அடைந்து துர்க்கா உடலில் மண்எண்ணை ஊற்றி தீவைத்ததாக கூறப்படுகிறது. இதில் அவர் உடல் கருகினார்.

உயிருக்கு ஆபத்தான நிலையில் அவரை no prescription online pharmacy புதுவை அரசு ஆஸ்பத்திரியில் கொண்டு வந்து சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் துர்க்கா பரிதாபமாக செத்தார். இதுகுறித்து அரகண்ட நல்லூர் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் விசாரணை நடத்தினார்கள். இதுதொடர்பாக ரவியை போலீசார் தேடி வருகின்றனர்.

Add Comment