விழுப்புரம் தண்டவாளம் தகர்ப்பு விவகாரத்தில் காங்கிரஸ் எம்.எல்.ஏ., ஹசன் அலிக்கு தொடர்பு?

விழுப்புரம் தண்டவாளம் தகர்ப்பு விவகாரத்தில் ராமநாதபுரம் எம்.எல்.ஏ., ஹசன் அலிக்கு தொடர்ப்பு இருப்பதாக, விழுப்புரம் சரக போலீஸ் டி.ஐ.ஜி.யிடம் வழக்கறிஞர்கள் 5 பேர் புகார் மனு கொடுத்துள்ளனர்.

கடந்த சனிக்கிழமை அதிகாலை 2 மணிக்கு விழுப்புரம் அருகே ரயில் தண்டவாளத்தில் குண்டு வெடிப்பு நிகழ்ந்தது. இதை முன்கூட்டியே கண்டுபிடிக்கப்பட்டதால், பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. இச்சம்பவம் தொடர்பாக போலீசார் Lasix online விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில் இன்று விழுப்புரம் சரக போலீஸ் டி.ஐ.ஜி.யிடம், தண்டவாள தகர்ப்பில் ஈழத்தமிழர் ஆதரவாளர்களுக்கு தொடர்பு இல்லை. விழுப்புரம் அருகே தண்டவாளம் தகர்ப்பில் காங்கிரஸ் எம்எல்ஏ அசன் அலிக்கு, தொடர்பு உள்ளது என்றும், அதற்கான ஆதாரங்கள் தங்களி‌டம் இருப்பதாகவும். ஆனால் அதை வெளியிட்டால் வழக்கின் புலன் விசாரணைக்கு பாதகமாகிவிடும் என்று வழுக்கறிஞர்கள் 5 பேர் புகார் மனு கொடுத்துள்ளனர்.

தண்டவாளம் தகர்ப்பு சம்பவத்தில், காங்கிரஸ் எம்எல்ஏ மீது புகார் கொடுத்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

செய்தி: நக்கீரன்

Add Comment