தங்கம் விலையில் தொடர் சரிவு!

கடந்த ஒரு மாத காலமாக ஏறுமுகத்தில் இருந்துவந்த Buy cheap Doxycycline தங்கத்தின்விலை கடந்த ஓரிரு நாட்களாக தொடர்ந்து இறங்குமுகத்தில் உள்ளது. சென்னை மார்க்கட்டில் தற்போது ஒரு கிராம் தங்கம் 2,075 க்கு விற்கப்படுகிறது.

தங்கத்தின் விலை கடந்த ஒரு மாதமாக தொடர்ந்து ஏறுமுகமாக இருந்து வந்தது. 5 நாட்களுக்கு முன்னர் ஒரு பவுன் தங்கம் ரூ.17 ஆயிரத்தைத் தொட்டது. இந்நிலையில், தங்கத்தின் விலை கடந்த 2 நாட்களாக தொடர்ந்து குறைந்து வருகிறது. நேற்று முன்தினம் ஒரு பவுன் தங்கம் ரூ.16,768-க்கு விற்பனையானது. அன்று ஒரே நாளில், பவுனுக்கு ரூ.224 குறைந்தது.
நேற்று மீண்டும் தங்கத்தின் விலையில் சரிவு தொடர்ந்தது. ஒரு கிராம் தங்கம் ரூ.2,075-ஆக குறைந்து ஒரு பவுன் தங்கம் 16 ஆயிரத்து 600-க்கு விற்பனையானது. நேற்று ஒரே நாளில் மட்டும் ஒரு பவுனுக்கு ரூ.168 குறைந்தது.

இன்று மார்க்கட் விடுமுறையாதலால் இன்றைய விலையில் மாற்றமேதும் இருக்காது.

Add Comment