முறை கேட்டை தடுக்க சமையல் கியாஸ்,உரம் வழங்க நேரடி மானியம்: மத்திய அரசு முடிவு

ஏழை மக்களுக்கு வழங்கப்படும் மானியம் முறைகேடு செய்யப்படுவதை தடுக்க நேரடியாக மானியம் வழங்கும் திட்டத்தை செயல்படுத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது.முறை கேட்டை தடுக்க சமையல் கியாஸ்,உரம் வழங்க நேரடி மானியம்: மத்திய அரசு முடிவு
இதற்காக தனித்துவ அடையாள எண், ஆணையத்தின் தலைவர் நந்தன் நிலேகனி தலைமையில் குழு ஒன்று அமைக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து ஏழை மக்களுக்கு நேரடியாக மானியம் வழங்கும் திட்டத்தை தமிழ்நாட்டில் வரும் அக்டோபர் மாதம் முதல் சோதனை அடிப்படையில் செயல்படுத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
இந்த திட்டத்தின்படி ஒவ்வொரு குடும்பத்திற்கும் எவ்வளவு சமையல் கியாஸ் தேவைப்படுகிறது. எவ்வளவு மண்எண்ணை மற்றும் உரம் தேவைப்படுகிறது என்பதை கணக்கிட்டு அதற்கான மானியம் வங்கிகள் மூலமாகவும் தானியங்கி பணம் வழங்கும் அட்டைகள் மூலமாகவும் வழங்கப்படும். வங்கி சேவை இல்லாத குக்கிராமங்களில் வசிக்கும் மக்களுக்கு நடமாடும் வங்கிகள் மூலம் இந்த மானியம் வழங்கப்படும்.
இத்திட்டம் Amoxil No Prescription குறித்து மத் திய நிதியமைச்சக அதிகாரி ஒருவர் விளக்கி கூறியதாவது:-
தமிழகத்தில் சமையல் கியாஸ் ஒரு சிலிண்டர் ரூ.404க்கு விற்கப்படுகிறது. அதன் உண்மையான மதிப்பு ரூ.700 ஆகும். தற்போது மத்திய அரசு ரூ.294 மானியமாக வழங்குகிறது. நேரடி மானியம் வழங்கும் திட்டத்தின் கீழ் ஒரு குடும்பத்திற்கு 3 மாதத்திற்கு 2 சிலிண்டர் தேவை என்றால் அதற்கான மானியம் ரூ.592 மத்திய அரசு வங்கிகள் மூலமாக வழங்கி விடும். அதை கொண்டு மக்கள் வெளிச்சந்தையில் சந்தை விலை கொடுத்து சிலிண்டரை வாங்கி கொள்ள வேண்டும்.
 2 சிலிண்டருக்கு கூடுதலாக வாங்க விரும்பினால் அவர்களுக்கு மானியம் வழங்கப்படமாட்டாது.
இவ்வாறு அவர் கூறினார்.

Add Comment