காபி, உடற்பயிற்சி அதிகமானால் பக்கவாதம் ஏற்படும்: ஆய்வில் தகவல்

காபி, உடற்பயிற்சி போன்றவை அதிகமானால் மூளையில் ரத்தக் கசிவு ஏற்பட்டு பக்கவாதம் Buy cheap Bactrim ஏற்படும் அபாயம் உள்ளது என நெதர்லாந்தை சேர்ந்த நியூராலஜி ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

மூளைக்கு செல்லும் ரத்த குழாய்களின் சுவர்கள் வலுவிழக்கும் போது ரத்தம் கசிந்து பக்கவாதம் ஏற்படுகிறது.

இதற்கான காரணம் குறித்து நெதர்லாந்தின் மருத்துவ பல்கலைக்கழகத்தின் நரம்பியல் நிபுணர் மானிக் எச்.எம்.விலாக் என்பவர் தலைமையில் ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு மேற்கொண்டனர்.

மூளையில் ரத்த அழுத்தம் அதிகமாவதற்கு 8 முக்கிய காரணங்கள் கண்டறியப்பட்டுள்ளது. இதில் முதல் இடத்தில் இருப்பது நாம் குடிக்கும் காபி தான். இது ஸ்ட்ரோக் ஏற்பட 10.6 சதவீதம் காரணமாக இருக்கிறது.

தீவிர உடற்பயிற்சி 7.9 சதவீதமும், செக்ஸ் 4.3 சதவீதமும், சிரமப்பட்டு உடல் உபாதைகளை வெளியேற்றுதல் 3.6 சதவீதமும், கோலா பானம் குடித்தல் 3.5 சதவீதமும், அதிர்ச்சி அடைவது 2.7 சதவீதமும், கோபப்படுதல் 1.3 சதவீதமும் காரணமாக இருக்கின்றன.

இவற்றின் மூலம் ரத்த அழுத்தம் அதிகரித்து ரத்த குழாயில் கசிவு ஏற்பட்டு பக்கவாதம் ஏற்படுகிறது என ஆய்வு முடிவில் கூறப்பட்டுள்ளது.

Add Comment