வாக்காளர்களுக்குப் பணம் கொடுத்த வழக்கில் எம்.எல்.ஏ ஆஜர்!

கடந்த 2011 தமிழக சட்டப்பேரவை தேர்தல் பிரச்சாரத்தின்போது, வாக்காளர்களுக்குப் பணம் கொடுத்ததாக பதிவு செய்யப்பட்ட வழக்கில், பாளை தொகுதி எம்.எல்.ஏ மைதீன் கான் நீதிமன்றத்தில் ஆஜரானார்.

 

தேர்தல் பிரசாரத்தின் போது வாக்காளர்களுக்கு ஆரத்தி தட்டில் பணம் போட்டதாக பாளை தொகுதி எம்எல்ஏ டிபிஎம் மைதீன்கான் மீது பாளையைச் சேர்ந்த அதிமுக பிரமுகர் அசன் ஜாபர்அலி வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு நெல்லை குற்றவியல் Viagra online முதலாம் எண் நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.

இந்நிலையில் நேற்று இவ்வழக்கில் டிபிஎம் மைதீன்கான் நீதிமன்றத்தில் நேரில் ஆஜரானார். அவரிடம் நீதிபதி ராபின்சன் ஜார்ஜ், ”உங்கள் மீது கூறப்பட்ட குற்றச்சாட்டு உண்மைதானா?” எனக் கேட்டார்.

அதற்கு அவர், “பொய் வழக்கு போட்டிருப்பதாக” கூறினார். அவரது சார்பில் வழக்கறிஞர்கள் பிரபாகரன், ஜோதிமுருகன், முத்துராமலிங்கம், சூடாமணி, சுரேஷ்குமார், அபுபக்கர் ஆகியோர் ஆஜராயினர். இவ்வழக்கு ஆக. 3ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது.

Add Comment