விமானம் தரையில் விழுந்து நொறுங்கியதில் 72 பேர் பலி

காங்கோ நாட்டில் உள்ள கிசான்கானி விமான நிலையத்தில் ஹேவா போரா விமான நிறுவனத்துக்கு no prescription online pharmacy சொந்தமான விமானம் ஒன்று வந்து கொண்டு இருந்தது. அதில் பயணிகளும், ஊழியர்களுமாக மொத்தம் 112 பேர் இருந்தனர்.

அந்த போயிங் 727 ரக விமானம், விமான நிலையத்தின் ஓடு பாதையில் சரியாக இறங்க வில்லை. இதனால் விமான நிலையம் அருகே தரையில் விழுந்து நொறுங்கியது. உடனடியாக சம்பவ இடத்துக்கு மீட்பு குழுவினர் விரைந்து சென்றனர்.

 விமானத்தின் இடிபாடுகளில் சிக்கித்தவித்த 40 பேரை மீட்பு படையினர் மீட்டனர். இவர்களை தவிர மற்ற 72 பேர்களும் உயிர் இழந்தனர்.

Add Comment