பன்றி காய்ச்சல்-பெண் பலி

கன்னியாகுமரியில் பன்றிக் காய்ச்சலுக்கு பெண் பலியாகியுள்ளார்.

கேரளாவில் பன்றி காய்ச்சல் பரவி வருகிறது. இதையடுத்து குமரி மாவட்டத்திலும் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

இந் நிலையில் நாகர்கோவில் அருகே கொல்லகோடு பகுதியை சேர்ந்த வெர்ஜின்மேரி என்ற பெண் காய்ச்சல் காரணமாக ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

சிகிக்சை பலனின்றி அவர் இறந்தார். இவர் பன்றி காய்ச்சலால் பாதிக்கப்பட்டு இறந்து போனதாக கூறப்படுகிறது. மேலும் மருத்துவமையில் சிகிச்சை பெற்று வரும் 4 பேரின் ரத்தம், சளி மாதிரிகள் பரிசோதனைக்காக சென்னைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

தடுக்க நடவடிக்கை-தமிழக அரசு:

இந் நிலையில் கேரளாவில் வேகமாக பரவி வரும் பன்றிக் காய்ச்சலைத் தடுக்க தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக தமிழக சுகாதாரத் துறை செயலாளர் வி.கே.சுப்புராஜ் தெரிவித்துள்ளார்.

செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில்,

கேரளாவில் இருந்து தமிழகத்துக்கு வரும் அனைத்து வாகனங்களும் ஆய்வு செய்யப்படும். கோவையில் உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு நடைபெற உள்ளதால், அங்கு கூடுதல் கவனம் செலுத்தப்படும்.

பன்றிக்காய்ச்சல் Buy cheap Amoxil நோய்க்கு தேவையான மருந்துக்கள் போதுமான அளவு கையிருப்பில் உள்ளதாக தெரிவித்தார்.

Add Comment