ராஜினாமா ஏன்? கலைஞரிடம் தயாநிதிமாறன் விளக்கம்

2ஜி ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில், மத்திய அமைச்சர் தயாநிதிமாறன் சி.பி.ஐ. விசாரணை வளையத்தில் இருப்பதாக சுப்ரீம் கோர்ட்டில் கூறி உள்ளதை அடுத்து எதிர்கட்சிகள் அவரை பதவி விலகுமாறு வலியுறுத்தி வருகின்றன.

இந்த நிலையில் பிரதமர் வீட்டில் 07.07.2011 அன்று மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. இதில் மத்திய ஜவுளித்துறை அமைச்சர் தயாநிதிமாறன் கலந்து கொண்டார்.

பிரதமர் Bactrim No Prescription தலைமையில் நடந்த மத்திய அமைச்சரவை கூட்டத்தில் கலந்து கொண்ட மத்திய அமைச்சர் தயாநிதி மாறனை அமைச்சர் பதவியை ராஜினாமா செய்ய வலியுறுத்தியதாக கூறப்படுகிறது.

இதனையடுத்து அவர் பிரதமர் இல்லத்தில் மன்மோகன்சிங்கை சந்தித்து பதவியை ராஜினாமா செய்தார்.

டெல்லி ரேஸ் கோர்ஸ் சாலையில் உள்ள பிரதமர் இல்லத்திற்கு வந்த தயாநிதி மாறன் தனது கடிதத்தை சமர்ப்பித்துவிட்டு அங்கிருந்து உடனடியாக புறப்பட்டுச் சென்றார்.

இந்நிலையில் தயாநிதிமாறன்,  சென்னையில் திமுக தலைவர் கலைஞர் கருணாநிதியை சந்தித்து பேசினார்.

இந்த சந்திப்பின்போது டி.ஆர்.பாலு உடன் இருந்‌தார். சந்திப்பு குறித்து பத்திரிகையாளர்களுக்கு கூற தயாநிதி மறுத்து வி‌ட்டார்.

மத்திய அமைச்சர் பதவியில் இருந்து விலகிய தயாநிதி, இந்‌த விவகாரம் குறித்து கருணாநிதியிடம் விளக்கினார் என்று தெரிகிறது.

Add Comment