தமிழ்நாடு மாநில திட்டக் குழு மாற்றியமைப்பு

முதல்வர் ஜெயலலிதா தலைமையில் இயங்கும் மாநில திட்டக்குழு துணைத் தலைவராக  ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி சாந்தா ஷீலா நாயர் நியமிக்கப்பட்டுள்ளார்.
புற்றுநோய் மருத்துவமனை தலைவர் வி.சாந்தா, தொழில் அதிபர் ஏ.சி.முத்தையா, அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் பாலகுருசாமி ஆகியோர் உள்பட 5 பேர் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
இது குறித்து ஆளுனரின் உத்தரவின் பேரில் திட்டமிடுதல், வளர்ச்சி மற்றும் சிறப்பு முன் முயற்சி துறை முதன்மைச் செயலாளர் ஆர்.விஜயகுமார் வெளியிடப்பட்டுள்ள அரசாணை விவரம்:

முதல்வர் தலைமையில் மாநில திட்டக் குழு இயங்கி வருகிறது. இந்த குழு ஆண்டு திட்டங்கள், ஐந்தாண்டு திட்டங்கள் ஆகியவற்றை தயாரிப்பில் முக்கிய பங்காற்றி வருகிறது.

ஒவ்வொரு நிதியாண்டிலும் பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவதற்கு முன்பாக ஆண்டு திட்டங்கள் குறித்து இறுதி செய்யப்படுவது வழக்கமாகும். நடப்பு நிதியாண்டிற்கான உத்தேச திட்டங்கள் குறித்த விவாதம் விரைவில் துவங்க உள்ளது. 12-வது ஐந்தாண்டு திட்டத்திற்கான அணுகுமுறை அறிக்கையும் தயாரிக்கப்பட உள்ளது.

பல்வேறு துறைகளைச் சார்ந்த பணிக்குழுக்களுடன் இது தொடர்பாக  ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டங்களில் முன்னுரிமை குறித்து அரசுக்கு உரிய முறையில் ஆலோசனை கூறுவதற்காக மாநில திட்டக்குழு திருத்தி அமைக்கப்படுவது அவசியமாகிறது. எனவே மாநில திட்டக்குழுவில் கீழ்க்கண்ட மாற்றங்களை அரசு  செய்துள்ளது.  இந்த திட்டக்குழு நியமனம் உடனடியாக அமலுக்கு வருகிறது.

திட்டக்குழுவில் இடம் பெற்றுள்ளவர்களின் விவரம் வருமாறு:

1. சாந்தா ஷீலா நாயர் (ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி) – துணைத் தலைவர்.
2. டாக்டர் வி.சாந்தா (சென்னை புற்றுநோய் மருத்துவமனை தலைவர்)  உறுப்பினர் (சுகாதாரம்)
3. டாக்டர் கே.ஸ்ரீதர் (பிளாஸ்டிக் சர்ஜரி நிபுணர்) உறுப்பினர்  (சுகாதாரம்)
4. கே.ராமசாமி (கோவை கற்பகம் பல்கலைக்கழக துணை வேந்தர் ) உறுப்பினர் (விவசாயம் மற்றும் பாசனம்)
5. ஏ.சி.முத்தையா (தொழில் அதிபர்) உறுப்பினர் (தொழில்)
6. இ.பாலகுருசாமி (அண்ணா Lasix No Prescription பல்கலைக்கழக துணை வேந்தர் ) உறுப்பினர்  (கல்வி)
உறுப்பினர்கள் நியமனத்துக்கான நிபந்தனைகள் மற்றும் விதிமுறைகள் குறித்த விவரங்கள் தனியாக வெளியிடப்படும் என்று அதில் கூறப்பட்டுள்ளது.

Add Comment