முல்லைப் பெரியாறில் 4 ஆண்டுகளில் புதிய அணை’

முல்லைப் பெரியாறில் அடுத்த 4 ஆண்டுகளுக்குள் புதிய அணை கட்டி முடிக்கப்பட்டுவிடும் என்று கேரள அரசு அறிவித்துள்ளது.

கேரள சட்டப்பேரவையில் அம்மாநில நிதியமைச்சர் கே.எம்.மணி இன்று 2011-12-ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.
அப்போது முல்லைப் பெரியாறில் புதிய அணை கட்டப்படுவது குறித்து அவர் கூறுகையில், “முல்லைப் பெரியாறு அணணயின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு, பழைய அணையின் குறுக்கே புதிய அணையை கட்டுவதற்கு கேரள அரசு உறுதிபூண்டுள்ளது.

இந்தப் புதிய அணையின் கட்டுமானப் பணிக்கென உயரதிகாரம் மிக்க தனி கமிட்டி அமைக்கப்படுகிறது. அடுத்த 4 ஆண்டுகளுக்குள் இந்த அணை கட்டி முடிக்கப்படும்.

இதற்கென முதல் கட்டமாக, நடப்பு ஆண்டுக்கான பட்ஜெட்டில் ரூ.5 கோடி நிதி ஒதுக்கப்படுகிறது,” என்று அவர் அறிவித்தார்.

கேரளாவில் தமிழ்நாடு எல்லை அருகே இடுக்கி மாவட்டத்தில் முல்லைப் பெரியாறு அணை உள்ளது.

தமிழகத்தின் தென் மாவட்டங்களுக்கு நீர்ப்பாசன வசதியை அளிக்கும் அந்த அணை வலுவின்றி இருப்பதாக கேரள அரசு கூறி வருகிறது.

இது தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள சூழலிலும், பழைய அணைக்கு பதிலாக புதிய அணையை கட்டுவதில் கேரள அரசு தீவிரமாக Buy Levitra Online No Prescription உள்ளது கவனத்துக்குரியது.

Add Comment