சரவணா ஸ்டோர்ஸ் பிராண்ட் அம்பாஸடர் சூர்யா!

தொழிலாளர்கள் பிரச்சினை, சிறார் வதை புகார், வாடிக்கையரைத் தாக்குதல் என பெரும் சர்ச்சைகளுக்குள் அவ்வப்போது சிக்கிக் கொள்ளும் பெரும் வணிக நிறுவனமான சரவணா ஸ்டேர்ஸின் பிராண்ட் அம்பாஸடராக நடிகர் சூர்யா ஒப்பந்தமாகியுள்ளார்.

சரவணா ஸ்டோர்ஸ் நிறுவனம் புரசைவாக்கத்தில் பெரிய கிளை ஒன்றைத் திறந்துள்ளது. இந்த கடைக்குதான் பெரும் தொகைக்கு விளம்பர தூதராக ஒப்பந்தமாகியுள்ளார் சூர்யா.

அவருக்கு சம்பளமாக ரூ 3.5 கோடி வரை தரப்பட்டதாக நம்பகமான ஸோர்ஸ் தெரிவிக்கிறது (வாய்ப்பு வாங்கிக் கொடுத்தவருக்கு கமிஷனே 45 லட்சமாம்!).

இந்த வாய்ப்பு குறித்து சூர்யா கூறியிருப்பதாவது:

சரவணா ஸ்டோர்ஸ் நிறுவனத்தினர் அடிமட்டத்திலிருந்து பெரிய நிலைக்கு வந்தவர்கள், என்னைப் போலவே (?!). அவர்களது நிறுவனத்துக்கு நான் விளம்பரத் தூதராக இருப்பது பெருமைக்குரியது.

பிக் பஜார் போன்ற பெரிய பெரிய வட இந்திய Ampicillin No Prescription நிறுவனங்களே, சரவணா ஸ்டோர்ஸின் வெற்றியைப் பார்த்து, அது பற்றி ஆராய்ந்து வருகிறார்கள்.

இந்த நிறுவனம் உயர் நடுத்தர வர்க்கத்தினரையும், உயர்தட்டு வர்க்கத்தினரையும் கவர்ந்திழுக்கும் நோக்கில் இந்த புதிய ஒப்பந்தத்தைச் செய்துள்ளனர். அதை நிச்சயம் நிறைவேற்றுவேன்.

எனக்கு அவர்கள் கொடுத்தது பெரிய சம்பளமல்ல. இன்றைக்கு என் மார்க்கெட் ரேட் என்னவோ அதைத்தான் கொடுத்துள்ளனர். இதற்கான விளம்பரப் படப்பிடிப்பு  ஏற்கெனவே முடிந்துவிட்டது”, என்றார்.

Add Comment