பாகிஸ்தானில் மோதல்: கராச்சியில் சாவு 100 ஆனது

 

பாகிஸ்தானில் மோதல்: கராச்சியில் சாவு 100 ஆனது
பாகிஸ்தானில் சிந்து மாகாண தலைநகர் கராச்சியில் ஆளும் பாகிஸ்தான் மக்கள் கட்சிக்கும், முத்தாஹிதா குவாமி கட்சிக்கும் இடையே அரசியல் விரோதம் காரணமாக மோதல் ஏற்பட்டுள்ளது. அந்த மோதல் கலவரமாக மாறியது. கடைகள் மற்றும் வீடுகளுக்கு தீ வைக்கப்பட்டது.
மேலும் வீடு புகுந்து ஒருவரையொருவர் துப்பாக்கியால் சுட்டு கொல்வது மற்றும் ராக்கெட் குண்டுகள் மற்றும் கையெறி குண்டுகளை வீசியும் தாக்குதல் நடத்தப்பட்டது.
இது போன்று 5 நாட்களாக நடந்த கலவரத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை 100 ஆக உயர்ந்துள்ளது. Buy Cialis 250 பேர் காயம் அடைந்தனர். கலவரத்தை அடக்க கூடுதலாக ராணுவத்தினர் அங்கு அனுப்பி வைக்கப் பட்டுள்ளனர். மேலும் கலவரக்காரர்களை கண்டதும் சுட உத்தரவிடப்பட்டுள்ளது.

Add Comment