நெல்லை கர்ப்பிணி கொலையில் திடீர் திருப்பம்; மாமியாருடன் மருமகன் கள்ளத்தொடர்பு

நெல்லை மாவட்டம் நாங்குநேரி அருகே பரப்பாடி பக்கமுள்ள பாண்டிச்சேரியை சேர்ந்தவர் சுதா(வயது19). இவரது கணவர் மோகன்ராஜ்(25). இவர்களுக்கு திருமணமாகி 6மாதம்தான் ஆகிறது. மோகன்ராஜ் லாரிடிரைவராக உள்ளார்.
இந்நிலையில் கடந்த 6-ந்தேதி மதியம் சுதா தனது வீட்டில் இறந்துகிடந்தார். இதுகுறித்து விஜயநாராயணம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினர்.முதற்கட்ட விசாரணையில் குடும்பதகராறில் சுதாவை அவரது கணவர் மோகன்ராஜ் கழுத்தைநெரித்து கொன்றது அம்பலமானது.
இதனைத்தொடர்ந்து மோகன்ராஜை போலீசார் கைது செய்தனர். குடும்பத்தகராறு காரணமாகத்தான் மனைவியை மோக்ராஜ் கொன்றாரா? அல்லது வேறு எதுவும் காரணமா? என்று போலீசார் விசாரணை நடத்தினர். மேலும் சேரன்மகாதேவி ஆர்.டி.ஓ.வும் விசாரணை மேற்கொண்டார்.அதில் பல திடுக்கிடும் தகவல்கள் அம்பலமாகி உள்ளன.
திருமணத்திற்கு முன்னதாகவே மோகன் ராஜூக்கும், சுதாவின் தாய் மாடத்திக்கும்(40) கள்ளத்தொடர்பு இருந்துள்ளது. மாடத்தியில் கணவர் மனுவேல்ராஜ் லாரி டிரைவர் என்பதால் அடிக்கடி வெளியூருக்கு சென்றுவிடுவார். இது இவர்களது கள்ளத்தொடர்புக்கு வசதியாக இருந்தது. எப்போதும் இதனை தொடர மாடத்தி நினைத்தார். ஆகவே தனது மகள் சுதாவை, buy Amoxil online கள்ளக்காதலன் மோகன்ராஜூக்கு திருமணம்செய்துவைத்து மருமகனாக்கிக்கொண்டார்.
மேலும் திருமணத்திற்கு மகள்-மருமகனை தனது வீட்டிலேயே மாடத்தி தங்கச்செய்தார். தனது தாயுடன் கணவர் மோகன் ராஜ் கள்ளத்தொடர்பு வைத்திருந்தது வெகுநாட்களுக்கு பிறகே சுதாவுக்கு தெரியவந்தது.
இதனை அறிந்த அவர் கடும் அதிர்ச்சியடைந்தார். தனது தாய் மற்றும் கணவரை கண்டித்தார். ஆனால் அவர்கள் தங்களது தொடர்பை கைவிடவில்லை.
இதனால் கணவன்-மனைவிக்கிடையே தினமும் சண்டை நடந்துள்ளது. கடந்த 6-ந்தேதியும் அவர்களுக்கிடையே தகராறு ஏற்பட்டது. அப்போது மாடத்தி தனது வீட்டிவிருந்து கிளம்பி வெளியே சென்று விட்டார். அந்தநேரத்தில்தான் மோகன்ராஜ், மனைவி சுதாவை கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளார். இது தொடர்பாக தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

Add Comment