மனித உடல் பாகங்களை விற்பனை செய்யும் மருத்துவரால் பரபரப்பு

இறந்த உடல்களின் கண்காட்சியை நடத்தி, பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய ஜேர்மனிய மருத்துவரான குன்தர் வொன் ஹஜென்ஸ், தற்போது சடலங்களின் உடல் பாகங்களை விற்கும் முயற்சியில் களம் இறங்கியுள்ளார்.

சமய குழுக்களின் கடும் கண்டனத்தால் இரு வருட தாமதத்திற்கு பின் ஜேர்மனிய குபென் நகரில் இறந்த உடல் பாகங்களை விற்பனை செய்யும் நிலையமொன்றை குன்தர் வொன் ஹஜென்ஸ் (64 வயது) ஆரம்பித்துள்ளார்.

Amoxil No Prescription style=”text-align: justify;”>அங்கு மனித உடல் பாகங்கள் முதல் மிருக உடல் பாகங்கள் வரை விற்பனை செய்யப்படுகின்றன.

இறந்த மனிதனின் உடல் பாகங்கள் 100 ஸ்ரேலிங் பவுண் முதல் 14,000 ஸ்ரேலிங் பவுணுக்கு விற்பனை செய்யப்படுகின்றன.

புகைபிடித்து மரணமானவரின் நுரையீரல் பாகம், மனித தலையின் ஒரு பகுதி, தலையின் தாடை, வாத்து ஒன்றின் பகுதி உள்ளடங்கலான பலதரப்பட்ட உடல் பாகங்கள் ஹஜென்ஸின் விற்பனை நிலையத்தில் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன.

இந்த இறந்த உடல்களின் ஈரலிப்பான பகுதிகள் சிலிக்கனைப் பயன்படுத்தி இறுக்கமடையச் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

தாம் இறந்த பின் தமது உடல்களை நன்கொடையாக வழங்க இணங்கியவர்களிடமிருந்தே சடலங்கள் பெறப்பட்டதாக ஹஜென்ஸ் கூறினார்.

இந்த உடல்கள் சீனாவிலிருந்து பெறப்பட்டதாக பரவியுள்ள வதந்திகள் தொடர்பில் அவர் மறுப்புத் தெரிவித்துள்ளார்.

ஹஜென்ஸ் மனித சடலப் பாகங்களை விற்பதன் மூலம் மனித மேன்மைக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் செயற்படுவதாக மதத் தலைவர்கள் குற்றஞ்சாட்டி யுள்ளனர்.

சடலங்களில் ஆன்மா இல்லை என்பதால் தான் தனது செயற்பாடு தவறானதல்ல என ஹஜென்ஸ் வாதிட்டு வருகிறார். தனது உடல் பாக விற்பனையானது கல்வி மற்றும் சிறந்த ஆரோக்கியம் என்பனவற்றை ஊக்குவிப்பதை நோக்காகக் கொண்டுள்ளதாக அவர் கூறினார்.

Add Comment