ஊடகங்கள்(பீ. எம். கமால், கடையநல்லூர்.)

(காயல் பட்டினத்தில் 08 -07 -2011 வெள்ளிக்கிழமை யன்று ஈரோடு தமிழன்பன் அவர்கள் தலைமையில் ஊடகம் என்ற பொதுத் தலைப்பில்  நடைபெற்ற கவியரங்கில், ஈரோடு தமிழன்பனாலும் பார்வையாளர்களாலும் வெகுவாகப் பாராட்டு பெற்ற கவிதை இது. கவிதையை எழுதி வாசித்தவர்

பீ. எம். கமால், கடையநல்லூர்.)

ஊடகங்கள்

உத்தம நபிகள் என்னும்

ஊடகத்தைத் தந்துஎங்கள்

உள்ளத்து இருள்நீக்கி

ஒளியேற்றி வைத்தவனே!

உன்

திருநாமச் சாவி கொண்டு

திறக்கின்றேன் என்கவிதை !

 

எங்கள் குருநாதர்

ஏந்தல் முஹ்யித்தீன்

தங்கள் ஆசிகளைத்

தயவாய்ப் பெற்றிந்த

மேடையினில் என்கவிதை

மிகப் பணிவாய்த்

துவங்குகின்றேன் !

நாயனே! என் நாவின்

முடிச்சவிழ்த்து நலம்புரிவாய் !

 

தொண்டுள்ளம் கொண்டோரே !

தூயகலி மாவின்பொருள்

கண்டுள்ளம் ஏற்று

கனிவடையும் சான்றோரே !

சிறுமக்கம் காயலின்

பெருமைக்க ளேநீங்கள்

செவியரங்கம் திறந்து

கவியரங்கம் வந்துள்ளீர்

அனைவருக்கும் எனது

அஸ்ஸலாமு அலைக்கும் !

 

காயல்பட்டினம்-

ஆன்மீகச் செல்வர்களின்

காதல் பட்டினம் !

உத்தம நபிகளின் ஊடகங்களான

ஒலிமார்களின் தலைநகரம் !

சாத்தானுக்குத் தொலைநகரம்!

சத்தியத்தின் கலைநகரம் !

ஆன்மீகத்தின் அலைநகரம் !

திருப்புகழின் உலை நகரம் !

காயல்பட்டினம்-

பகுதாதின் பாதிப்பு !

மக்காவின் மறுபதிப்பு !

ஆன்மீகச் சோற்றில்

அளவான உப்பு !

 கடல் அலைக் கரங்களால்

வாரி வழங்குகின்ற

தாராள மனம்கொண்ட

தர்மபுரியும்” இதுதான் !

 

வானமுதத் தேன்கலந்து

வள்ளல் நபிநாயகத்தின்

ஆன்மீகக் கல்வியை

ஊட்டிவிடுகின்ற

ஊட்டியும் இதுதான் !

 

தெருக்கள் தோறும்

Amoxil online justify;”>தீனிறைப் பள்ளிகள்

இருப்பதினால் இது

திருப்பதியும் ஆனது !

 

கறைமுகம் இல்லாத்

துறைமுகம் இந்தக்காயல் !

மதரசாக்கள் என்னும்

துறைமுகங்களில்

இஸ்லாத்தின் கல்வி

ஏற்றுமதியாகிறது !

 

 

இந்தப்

பட்டினத்துப் பாலைகளில்

படிந்திருக்கும் தூசுகளில்

இறைநேசச் செல்வர்களின்

எழிற் பாதம்பட்டதினால்

சுவனத்து மகரந்தம்

சூல்கொண்டிருக்கிறது !

 

இங்கே-

களவுகள் பிணக்குகள்

கடுகளவும் இல்லையதால்

காவல் நிலையம் இந்தக்

காயலிலே இல்லை !

 

ஈமானின் “ஆறு”

இங்கே இருப்பதினால்

இயற்கையாய் ஆறுகள்

இங்கே இல்லை !

 ஈமானும் சீமானும்

இரண்டறக் கலக்கின்ற

காயலிது!

அதனால்-

வறுமை எனபது

இல்லவே  இல்லை !

 

ஆமாம்-

தீனிலும் வறுமை இந்தத்

திசையிலே  இல்லை !

வாழ்க்கையிலும் வறுமை இந்த

வட்டாரத்தில் இல்லை !

 

இங்கே-

காமிலான ஒலிகளின்

கல்லறைகள் எல்லாமே

கர்த்தனின் செய்திக்

கருத்துரைகள் பரப்புகின்ற

ஊடகங்களின்

ஒளிபரப்புக் கோபுரங்கள் !

 

இங்கே

ஒரேயொரு தெருதான்

நெசவுத் தெருவென்று

நினைத்துக் கொண்டீர்களா ?

இல்லை –

எல்லாத் தெருக்களுமே

எழில் நெசவுத்

தெருக்கள் தான் !

தௌஹீதுப் பட்டாடை

தறிநெசவு நடக்கின்ற

நெஞ்சத்தில் நிறைகின்ற

நெசவுத் தெருக்கள் !

 

காயல் பட்டினம்-

தமிழ்த்

தாய்க்குப் பாலூட்டிய

பிள்ளைகள் பிறந்த ஊர் !

அவர்கள் ஊட்டியது

வெட்டிப் பாலான

புட்டிப் பால் அல்ல –

வானப் பால்மழை  தோற்கும்

ஞானப் பால் !

இங்கே நடப்பது

நாடகங்கள் நடத்தும்

ஊடகங்கள் அல்ல –

பாடங்கள் நடத்தும்

பல்கலைக் கழகங்கள் !

 

ஒலிமார்கள்-

நபிகள் நாயகத்தின்

நடமாடும் ஊடகங்கள் !

நமது

கண்மணி நாயகமோ

அல்லாஹ்வின் ஒளி பரப்பும்

அழகான ஊடகம் !

மூத்தகுடிப் பிறப்புக்கும்

முன்மாதிரி ஊடகம் !

மூச்சுக் காற்றையும்

சலவை செய்ய வந்த

மூலவ னிறைவனின்

பேச்சான ஊடகம் !

பெருமானாரின்

பிறப்புக்கு முன்பு

வெளிச்சத்தை விட்டில்கள்

கடித்துத்  தின்றன !

நெருப்பினைக் கரையான்

உண்டு கொழுத்தன !

பாலைவனமே

பழுதாகிக் கிடந்தது !

உத்தம நபிகளஎன்னும்

ஊடகம் வந்தபின்

சூரியனுக்கு சூடுமட்டுமல்ல

சொரணையும் வந்தது !

நிலவின் அகங்காரம்

நின்றுபோனது !

பூமியும் கூட

புள காங்கித்தது !

வெளிச்சம் தன்

இருட்டு முக்காட்டினை

உதறிவிட்டு

அகிலங்களுக்கு ஆதரவானது !

 மானாட மயிலாட

மனிதர்களின் மனங்களெல்லாம்

மகிழ்ச்சியினில் கூத்தாட

ஊடகம் ஒன்று தன்

ஒளிபரப்பை துவங்கியது !

ஆயிரத்து நானூறு

ஆண்டுகளுக்கு முன்னால் !

அது ஒரு

பத்திய விரதத்தின்

சத்திய மாதம் !

குகைக்குள்ளிருந்த

ஒளித்திரையில்

ஓதுவீராக – என்ற

ஒலிக்குறிப்போடு

ஒளிபரப்பு ஒன்று

உருவானது அன்று !

 பாவ நாடக

மேடை திரைவிழ

தூவ  கருணையின்

மழையின் துளிவிழ

ஊடகமாய் நபி

உதித்து வந்தனர் !

 

அந்த

ஊடகம் உலகில்

உருவான பின்னர்தான்

திருமறை எனும் தொடர்

நமக்குத்

திருத்தமாய்க் கிடைத்தது !

அந்தத் தொடரில்

ஆபாசங்கள் இல்லை.

ஆசா பாசங்களின்

அளவீடு இருந்தது !

சித்திகதைகளின்

சீரியல் இல்லை.

சித்தி அடைகின்ற

சீரிய வழிகள் இருந்தன !.

அத்திப்பூக்கள் அங்கே இல்லை-

மனிதனை

செத்திச் செதுக்கும்

நெறிகள் இருந்தன !

அந்தத் தொடரில்

வயலும் வாழ்வும் அல்ல-

செயலும் வாழ்வும்

சிறக்கும் வழிகள் இருந்தன !

குற்றம் கொலைகள்

கொள்ளை நிலைகளை

சத்தம் போட்டு

சாற்றும் ஊடகமாய்

பெருமானார் அன்று

பிறப்பெடுத்து வரவில்லை !

குடியுடன் கொலையைக்

கோர்த்து வாழ்ந்த

அடிமடையர்களை

அல்லாஹ்வின் திசைக்கு

திருப்பியும் திருத்தியும்

திருமறை வழியில்

திருந்தியும் வாழும்

திலகங்களாய் மாற்றினார்கள் !

ஊடகத்தின் நோக்கம்

உண்மை ஆனது அப்போது !

அந்த ஊடகம்

தனது ஒளிபரப்பை

ஹிராக் குகையின்

இருட்டில் துவங்கியது !

அதனால் நாமின்று

வெளிச்சத்தில் வாழுகிறோம் !

அந்த ஊடகத்தின்

கம்பிவட முகவர்களே

காமிலான ஒலிமார்கள் !

உத்தம நபிகளஎன்னும்

ஊடகம் இல்லையென்றால்

இருட்டுக்குள்தான் நாம்

இன்னும் இருந்திருப்போம் !

உயர்குண நபியின்

ஊடகத் திரையில்

6666  தொடர்கள்

ஒளிபரப்பப் பட்டதினால்

நமது உள்ளங்கள் மட்டுமல்ல

இல்லங்களும் கூட

இருள் அற்றுப் போயின !

 

இறைவா!

Add Comment