தென்காசி கோர்ட்டுகளில் நீதிபதி நியமிக்க வேண்டும்

தென்காசி: தென்காசி குற்றவியல் நீதித்துறை நடுவர் மன்றம் மற்றும் முதன்மை மாவட்ட உரிமையியல் நீதிமன்றத்தில் நீதிபதி நியமிக்க வேண்டும்’ என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.தென்காசி குற்றவியல் நீதித்துறை நடுவர் மன்றத்தில் தென்காசி, பாவூர்சத்திரம், ஆலங்குளம், சாம்பவர்வடகரை, சுரண்டை, ஊத்துமலை போலீஸ் ஸ்டேஷனில் பதிவாகும் வழக்குகள் விசாரிக்கப்பட்டு வருகிறது. தினமும் நூற்றுக்கணக்கான வழக்குகள் விசாரணைக்கு வருவது வழக்கம். இதனால் விடுமுறை நாட்கள் தவிர மற்ற நாட்களில் கோர்ட் முன்பு வழக்கில் சம்பந்தப்பட்டவர்கள், அவர்களின் உறவினர்கள், வக்கீல்கள், போலீசார் என கூட்டம் அதிகளவில் காணப்படும்.இந்த கோர்ட்டில் நீதிபதியாக இருந்த சரிதா பணியிடம் மாற்றம் செய்யப்பட்டார்.

இதன் பின்னர் கடந்த சில மாதங்களாக தென்காசி குற்றவியல் நீதித்துறை நடுவர் மன்றத்திற்கு தனியாக நீதிபதி நியமிக்கப்படவில்லை. சங்கரன்கோவில் குற்றவியல் நீதித்துறை நடுவர் மன்ற நீதிபதி பாலமுருகன் தென்காசி கோர்ட் பொறுப்பு நீதிபதியாக செயல்படுகிறார்.இவர் வாரத்தில் செவ்வாய், வியாழன் இருதினம் மட்டும் தென்காசிக்கு வந்து வழக்குகளை விசாரணை செய்வார். மற்ற நாட்களில் வழக்குகளில் யாரையாவது கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும் என்றால் சம்பந்தப்பட்ட போலீசார் விசாரணை கைதிகளை தென்காசி கோர்ட்டிற்கு அழைத்து வந்து பின்னர் சங்கரன்கோவிலுக்கு செல்ல வேண்டிய நிலை உள்ளது.

தற்போது Buy Viagra குற்றால சீசனுக்கு நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். இவ்வாறு வந்து செல்வோரில் சிலர் குடிபோதையில் வாகனங்களை ஓட்டியும், லைசென்ஸ் இல்லாமல் வாகனம் ஓட்டியும் போலீசில் சிக்குவது வாடிக்கையாகி விட்டது. இவ்வாறு பிடிபடும் நபர்களுக்கு கோர்ட்டில் அபராதம் விதிக்கப்படும். அபராதம் செலுத்தும் வரை அவர்கள் ஓட்டி வந்த வாகனங்களை போலீசார் பறிமுதல் செய்து வைப்பர். அபராத தொகை செலுத்தி விடுவார் என்ற நம்பிக்கை ஏற்பட்டால் மட்டுமே பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்களை போலீசார் உடனடியாக விடுவிப்பர்.

தென்காசி கோர்ட்டில் நீதிபதி பணியிடம் காலியாக இருப்பதால் உடனடியாக வாகன ஓட்டிகளுக்கு அபராதம் விதிக்க முடியவில்லை. மேலும் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்களையும் ஒப்படைக்க இயலவில்லை. இதனால் சம்பந்தப்பட்ட நபர்கள் வாகனங்களுடன் சில நாட்களாக தென்காசியில் தங்க வேண்டிய நிலை உள்ளது.இப்படி சிக்கியுள்ளவர்களுக்கு பரிந்துரை செய்து சில அரசியல் கட்சி பிரமுகர்கள், சில அரசு உயர் அதிகாரிகள் அல்லது முக்கிய பிரமுகர்கள் போலீஸ் ஸ்டேஷனுக்கு போன் செய்கின்றனர். இதனால் போலீசார் இருதலை கொள்ளி எறும்பாக பரிதவிக்கின்றனர். வேறு வழக்குகளில் சம்பந்தப்பட்டவர்களும் வாய்தா…வாய்தா… என தொடர்ந்து கோர்ட்டிற்கு வந்து செல்லும் நிலை உள்ளது. நூற்றுக்கணக்கானோர் இப்படி பரிதவித்து வருகின்றனர்.

மேலும் வக்கீல்களின் பணியும் பாதிக்கப்படுகிறது. வழக்குகளில் சம்பந்தப்பட்டவர்களுக்கு தேவையில்லாமல் அதிக செலவு, மன வருத்தம் ஏற்படுகிறது. காலதாமதமாக கிடைக்கும் நீதி மறுக்கப்பட்ட நீதிக்கு சமம். இதனால் அரசு துரித நடவடிக்கை எடுத்து உடனடியாக தென்காசி குற்றவியல் நீதித்துறை நடுவர் மன்றத்திற்கு நீதிபதி நியமிக்க வேண்டும் என அனைத்து தரப்பினரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.இதேபோன்று காலியாக உள்ள தென்காசி முதன்மை மாவட்ட உரிமையியல் நீதிமன்றத்திலும் நீதிபதி பணியிடம் நிரப்ப அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Add Comment