பிரேசில் அணி வெற்றி * வடகொரியா ஏமாற்றம்

வடகொரியாவுக்கு எதிரான உலககோப்பை கால்பந்து லீக் போட்டியில் பிரேசில் அணி 2-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.

உலககோப்பை கால்பந்து தொடர் தென் ஆப்ரிக்காவில் நடக்கிறது. நேற்று நடந்த லீக் போட்டியில், “ஜி’ பிரிவில் இடம் பெற்ற பிரேசில், வடகொரியா அணிகள் மோதின.

துவக்கம் ஏமாற்றம்: பரபரப்புடன் நடந்த இப்போட்டியின் 27 வது நிமிடத்தில் பிரேசில் அணிக்கும், 31 வது நிமிடத்தில் வடகொரியா அணிக்கும் “கார்னர் கிக்’ வாய்ப்புகள் கிடைத்தன. இரு அணிகளும் வாய்ப்பை கோட்டை விட்டன. 21 வது நிமிடத்தில் கிடைத்த அருமையான வாய்ப்பை, பிரேசில் வீரர் ராபின்ஹோ தவற விட்டார். முதல் பாதியில் இரு அணிகளும் கோல் எதுவும் அடிக்க வில்லை.

Buy Ampicillin style=”text-align: justify;”>சூப்பர் கோல்: இரண்டாவது பாதியில், பிரேசில் அசத்தியது. ஆட்டத்தின் 55 வது நிமிடத்தில் எலனோ கொடுத்த “சூப்பர் பாசை’ கோலாக மாற்றினார் பிரேசில் வீரர் மைகான். இதனையடுத்த 72 வது நிமிடத்தில் ராபின்ஹோவிடம் பந்தை பெற்றுக் கொண்ட எலனோ சூப்பர் கோலடித்தார். இதற்கு 89 வது நிமிடத்தில் வடகொரியா பதிலடி கொடுத்தது. அந்த அணியின் ஜி யன் னாம் சற்றும் எதிர்பாராத வகையில் மின்னல் வேகத்தில் ஒரு கோலடித்தார். இருப்பினும் இறுதியில் பிரேசில் 2-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.

Add Comment