சாதிக்க தவறினார் ரொனால்டோ* போர்ச்சுகல் “டிரா’

போர்ச்சுகல், ஐவரி கோஸ்ட் அணிகள் மோதிய உலககோப்பை கால்பந்து லீக் போட்டி, டிராவில் முடிந்தது. அதிகம் எதிர்பார்க்கப்பட்ட போர்ச்சுகல் வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ சாதிக்க தவறினார்.

தென் ஆப்ரிக்காவில் நடக்கும் உலககோப்பை கால்பந்து தொடரின், நேற்றைய லீக் சுற்றுப் போட்டியில், “ஜி’ பிரிவை சேர்ந்த போர்ச்சுகல், ஐவரி கோஸ்ட் அணிகள் மோதின.

வாய்ப்பு நழுவல்: போர்ச்சுகலின் நட்சத்திர வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோவை குறிவைத்து Buy Viagra Online No Prescription தாக்குதல் நடத்தினர் ஐவரி கோஸ்ட் வீரர்கள். ரொனால்டோவின் காலை பதம் பார்த்த, ஐவரி கோஸ்ட் வீரர் ஜொகாரா, “எல்லோ கார்டு’ பெற்றார். ஆட்டத்தின் 11 வது நிமிடத்தில் 75 அடி தூரத்திலிருந்து ரொனால்டோ “சூப்பர் ஷாட்’ அடித்தார். ஆனால் பந்து, பாரில் பட்டு சென்றதால், வாய்ப்பு நழுவியது.

“எல்லோ கார்டு’: ஆட்டத்தின் 21 வது நிமிடத்தில் ஐவரி கோஸ்ட் வீரர் டெமலுடன் காரசார மோதலில் ஈடுபட்ட ரொனால்டோ,”எல்லோ கார்டு’ பெற்றார். ரொனால்டோ மீது எந்த தவறும் இல்லாத போதும், உருகுவே நடுவர் லாரிண்டோ தவறுதலாக இந்த முடிவை எடுத்தார். இதனால் ரொனால்டோ கடும் அதிருப்தி அடைந்தார். முதல் பாதியில் இரு அணிகளும் கோல் எதுவும் அடிக்க வில்லை.

இரண்டாவது பாதியில் போர்ச்சுகல் அணிக்கு கிடைத்த இரண்டு “கார்னர் கிக்’ (70, 71, 88 வது நிமிடம்) வாய்ப்புகள் வீணானது. 80 வது நிமிடத்தில் “பிரீ கிக்’ வாய்ப்பு கிடைத்தது. ஆனால் ரொனால்டோ இதை கோலாக்க தவறினார். இறுதியில், “டிராவில்'(0-0) முடிந்தது.

Add Comment