இலவச லேப்டாப், மின்விசிறி, கிரைண்டர் வழங்கும் திட்டம்

சென்னை : இலவச லேப்டாப், மின்விசிறி, மிக்சி, கிரைண்டர் ஆகியவற்றை தயாரிக்கும் நிறுவனங்களுக்கான டெண்டர் இன்று திறக்கப்படுகிறது.
தமிழக அரசின் ஆளுநர் உரையில், ‘‘அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் பயிலும் அனைத்து பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 மாணவர்களும், அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்லூரிகளில் பயிலும் அனைத்து மாணவர்களும் பயன்பெறும் வகையில் இலவச மடிக்கணினி (லேப்டாப்) வழங்கப்படும்.

முதல் கட்டமாக 2011&2012ம் ஆண்டில் 9.12 லட்சம் மாணவ, மாணவிகளுக்கு லேப்டாப் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இதேபோல், தாய்மார்களுக்கு ஒரு மின்விசிறி, ஒரு மிக்சி, ஒரு கிரைண்டர் ஆகிய 3 பொருட்கள் இலவசமாக வழங்கப்படும்’’ என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இதையடுத்து, தமிழக அரசு சார்பில் ஒவ்வொரு பொருட்க ளுக்கும் தனித்தனியாக கடந்த 4ம் தேதி சர்வதேச அளவில் டெண்டர் கோரப்பட்டது. இதற்கு பல்வேறு தயாரிப்பு நிறுவனங்களிடம் இருந்து நல்ல வரவேற்பு கிடைத்தது.

மேலும், ஒப்பந்த புள்ளிகளை அளிக்க விரும்பும் நிறுவனங்களை அழைத்து, நுகர்பொருள் வாணிபக்கழக அதிகாரிகள் கடந்த மாதம் ஆலோசனையும் நடத்தினர். அப்போது, தயாரிக்கும் பொருட்கள் எவ்வாறு இருக்க வேண்டும் என்ற விதிமுறைகள் அவர்களுக்கு வழங்கப்பட்டது.

இந்நிலையில், மிக்சி, கிரைண்டர், மின்விசிறி போன்ற பொருட்களுக்கான ஒப்பந்த புள்ளிகளை தயாரிப்பு நிறுவனங்கள், இன்றைக்குள் (திங்கட்கிழமை) வழங்க வேண்டும் என்று அரசு அறிவித்திருந்தது. அதன்படி, மிக்சிக்கான ஒப்பந்த புள்ளிகளை காலை 11 மணிக்குள் வழங்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதைத்தொடர்ந்து, காலை 11.30 மணிக்கே டெண்டரும் திறக்கப்படுகின்றன.

கிரைண்டருக்கான ஒப்பந்த புள்ளிகளை மதியம் 12.30 மணி வரை அளிக்கலாம். இதற்கான ஒப்பந்த புள்ளிகள் பிற்பகல் 1 மணிக்கு திறக்கப்படுகின்றன. மின்விசிறிக்கான ஒப்பந்த புள்ளிகளை பிற்பகல் 2 மணி வரை அளிக்கலாம். இதன் ஒப்பந்த புள்ளிகள் பிற்பகல் 2.30 மணிக்கு திறக்கப்படுகிறது.

அதேபோல், லேப்டாப் திட்டத்துக்கான ஒப்பந்த புள்ளிகளும் இன்று திறக்கப்படுகின்றன. லேப்டாப் நிறுவனங்களை தேர்ந்தெடுத்து அவற்றை கொள்முதல் செய்து தரும் பணியை தமிழக அரசின் எல்காட் நிறுவனம் செய்து வருகிறது. அரசின் நிபந்தனைகள், வரவு, செலவுக்கு உட்படும் தயாரிப்பு நிறு வனங்கள் ஒப்பந்த புள்ளியில் தேர்வு செய்யப்படும். அதன் பின்னர் அந்த நிறுவனங்கள் உற்பத்தி செய்து தரும் Buy Ampicillin பொருட்கள் பொதுமக்களுக்கு இலவசமாக வழங்கப்படும். இந்த திட்டங்களை முதல்வர் ஜெயலலிதா செப்டம்பர் 15ம் தேதி தொடங்கி வைக்கிறார்.

Add Comment