இலங்கையிடம் வீழ்ந்தது பாக்., * அப்ரிதி சதம் வீண்

ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரை வெற்றியுடன் துவக்கியது இலங்கை. நேற்று நடந்த பரபரப்பான லீக் போட்டியில், பாகிஸ்தானை 16 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. பாகிஸ்தான் கேப்டன் அப்ரிதியின் அதிரடி சதம் வீணானது.

ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் இலங்கையில் நடக்கிறது. நேற்று நடந்த தொடரின் முதல் போட்டியில், பாகிஸ்தான், இலங்கை அணிகள் மோதின.

பவுலிங் மிரட்டல்: முதலில் பேட் செய்த இலங்கை அணிக்கு, துவக்கம் சரியாக அமையவில்லை. தரங்கா (11), தில்ஷன் (18) சொற்ப ரன்களுக்கு வெளியேறினர். 3 வது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த கேப்டன் சங்ககரா (42), ஜெயவர்தனா (54) சிறப்பாக ஆடி ரன் சேர்த்தனர். சமரவீரா (17) ஏமாற்றினார். ஒரு புறம் விக்கெட்டுகள் விழுந்தாலும், மறுமுனையில் அரை சதம் கடந்து அசத்தினார் மாத்யூஸ். இலங்கை அணி 50 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 242 ரன்கள் எடுத்தது. மாத்யூஸ் (55) அவுட்டாகாமல் இருந்தார்.
பாகிஸ்தான் தரப்பில் சோயப் அக்தர் 3 விக்கெட் வீழ்த்தினார்.

அப்ரிதி அதிரடி: எளிய இலக்கை விரட்டிய பாகிஸ்தான் அணி மலிங்கா வேகத்தில் திணறியது. ஷாஜைப் ஹசன் (11), சல்மான் பட் (0),சோயப் மாலிக் (8) உள்ளிட்ட “டாப்-ஆர்டர்’ பேட்ஸ்மேன்கள் ஏமாற்றினர். பின் அப்ரிதி, உமர் அக்மல் இணைந்து போராடினர். உமர் அக்மல் 30 ரன் எடுத்தார். காலில் ஏற்பட்ட காயத்தை பொருட்படுத்தாமல் அதிரடியாக ஆடிய அப்ரிதி, ஒரு நாள் அரங்கில் 5 வது சதம் கடந்தார். இவர் 109 (7 சிக்சர், 8 பவுண்டரி) ரன்களுக்கு அவுட்டானார்.

பாக்., தோல்வி: பின் வரிசையில் ஆமெர் (5), அக்தர் (1) ஏமாற்ற, பாகிஸ்தான் அணி 47 ஓவரில் 226 ரன்களுக்கு ஆல் அவுட்டாகி தோல்வி அடைந்தது. ரசாக் (26) அவுட்டாகாமல் இருந்தார். இலங்கை தரப்பில் மலிங்கா 5 விக்கெட் வீழ்த்தினார். அப்ரிதி ஆட்ட Buy cheap Ampicillin நாயகன் விருது வென்றார்.

Add Comment