இந்தியாவை சமாளிக்குமா வங்கதேசம் * இன்று ஆசிய கோப்பையில் மோதல்

ஆசிய கோப்பை லீக் போட்டியில், இன்று தோனி தலைமையிலான இந்திய அணி, வங்கதேசத்தை சந்திக்கிறது.

ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் இலங்கையில் நடக்கிறது. இதில் இன்று இந்திய அணி தனது முதல் லீக் போட்டியில், சாகிப் அல் ஹசனை கேப்டனாக கொண்ட வங்கதேசத்தை எதிர்கொள்கிறது.

“டுவென்டி-20′ உலக கோப்பை, ஜிம்பாப்வேயில் நடந்த முத்தரப்பு தொடர் என வரிசையாக இந்திய அணி மோசமான தோல்வியை சந்தித்தது. இந்நிலையில் ஆசிய கோப்பையில் தனது கேப்டன் திறமையை நிரூபித்து காட்ட வேண்டிய கட்டாயத்தில் தோனி உள்ளார்.

சேவக் ஜோடி: இந்திய அணிக்கு மீண்டும் சேவக், காம்பிர் ஜோடி துவக்கம் தரவுள்ளனர். உலகின் மிரட்டலான துவக்க ஜோடி எனப்பெயரெடுத்த இவர்கள் இன்று, சாதிக்க buy Cialis online முயற்சிக்கலாம். “மிடில் ஆர்டரில்’ ரெய்னா, ரோகித் சர்மா, விராத் கோஹ்லி நம்பிக்கை தருவார்கள். சச்சின் இல்லாத நிலையில் பேட்ஸ்மேன்கள் நிலைத்து நின்று ஆட வேண்டும்.

பவுலிங் சோதனை: பவுலிங்கை பொறுத்தவரையில் வேகப்பந்து வீச்சில் ஜாகிர் கானைத் தான் இந்திய அணி நம்பியுள்ளது. இவருடன் சமீபத்தில் சரியாக செயல்படாத நிலையிலும் ஆஷிஸ் நெஹ்ரா, பிரவீண் குமாருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. சுழலில் ஹர்பஜனுடன் பிரக்யான் ஓஜா, ரவிந்திர ஜடேஜா கைகொடுக்கலாம்.

அதிர்ச்சி அணி:வங்கதேச அணியை குறைத்து மதிப்பிடக்கூடாது. இந்த அணிக்கு பேட்டிங்கில் தமிம் இக்பால், இம்ருல் கைய்ஸ், சாகிப் அல் ஹசன், அஷ்ரபுல் நம்பிக்கை தருவார்கள். பவுலிங்கில் மொர்டசா, அப்துல் ரஜாக், ரூபல் ஹுசைன் மற்றும் சபியுல் இஸ்லாம் ஆறுதல் தரலாம்.

போட்டி குறித்து கேப்டன் சாகிப் அல் ஹசன் கூறுகையில்,”” ஒவ்வொரு முறையும் நாங்கள் முன்னேற்றம் கண்டு வரும் நாங்கள், போட்டியில் வெற்றிபெற விரும்புகிறோம். இதற்கான தகுதி எங்களிடம் உள்ளது,” என்றார்.

கோப்பை கனவு: ஆசிய கோப்பை தொடரில் சமீப காலமாக இந்திய அணியின் செயல்பாடு திருப்தியாக இல்லை. கடந்த 1995ல் சார்ஜாவில் நடந்த தொடரில் கோப்பை வென்றது. இதற்கு பின் சொதப்பி வருகிறது. சுமார் 15 ஆண்டுகளுக்கு பின் இம்முறை சாதிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

“நம்பர்-2′ வாய்ப்பு
சமீபத்தில் ஜிம்பாப்வேயில் நடந்த முத்தரப்பு ஒருநாள் தொடரில் இந்திய அணி மோசமான தோல்வியை சந்தித்தது. இதனால் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.,) ஒருநாள் அணிக்கான ரேங்கிங் பட்டியலில் 3வது இடத்துக்கு தள்ளப்பட்டது. ஆசிய கோப்பை தொடரில் சாதிக்கும் பட்சத்தில் மீண்டும் “நம்பர்-2′ இடத்தை பெறலாம்.

இரு அணிகள் இதுவரை…
இந்தியா, வங்கதேச அணிகள் இதுவரை 21 ஒருநாள் போட்டியில் மோதியுள்ளன. இதில் இந்தியா 19 முறையும், வங்கதேசம் இரு முறையும் வென்றுள்ளன.

Add Comment