அரசு விழாவில் காஞ்சிபுரம் கலெக்டரின் பர்ஸ் திருட்டு!

சென்னை  அருகே குன்றத்தூரில், துணை முதல்வர்  மு.க.ஸ்டாலின் கலந்து கொண்ட அரசு விழாவில் பங்கேற்ற காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சித் தலைவர் சந்தோஷ் மிஸ்ராவின் பர்ஸை சிலர் சுட்டு விட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

சென்னையை அடுத்த குன்றத்தூரில் நேற்று முன்தினம் ஊராட்சி ஒன்றிய பள்ளி சீரமைப்பு கட்டிடம் திறப்பு விழா நடந்தது. இந்த விழாவில் துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டார்.

விழா முடியப் போகும் நேரத்தில் சந்தோஷ் மிஸ்ரா பரபரப்பாக காணப்பட்டார். கேட்டபோது தனது பர்ஸைக் காணவில்லை என்றார். மேடையிலும் தேடிப் பார்த்தார். ஆனால் பர்ஸ் கிடைக்கவில்லை.

கலெக்டரின் பர்ஸைக் காணவில்லை என்பதை கேட்ட போலீஸாரும், அதிகாரிகளும் கூட சேர்ந்து தேடிப் பார்த்தனர். இரவு 11 மணியாகியும் பர்ஸ் Viagra online கிடைக்கவில்லை.

கலெக்டருக்கான அடையாள அட்டை, கிரடிட் கார்டுகள் உள்ளிட்ட பல அந்த பர்ஸில் இருந்ததாம். இதனால்தான் கலெக்டர் பதறிப் போய் விட்டார். பர்ஸ் கிடைக்காததால் விரக்தியுடன் கலெக்டர் அங்கிருந்து கிளம்பிச் சென்றார்.

கூட்ட நெரிசலைப் பயன்படுத்தி பிக்பாக்கெட் திருடர்கள் கலெக்டரின் பர்ஸை களவாடியிருக்க வேண்டும் என சந்தேகிக்கப்படுகிறது. இருப்பினும் இதுகுறித்து கலெக்டர் போலீஸில் புகார்  ஏதும் தரவில்லை.

Add Comment