11 பள்ளிகளைச் சேர்ந்த 1,445 பத்தாம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ்கள் மாயம்

திருச்சி  கல்வி  மாவட்டத்தைச் சேர்ந்த 11 பள்ளி மாணவ, மாணவிகளின் பத்தாம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ்களைக் காணவில்லை. மொத்தம் 1445 மதிப்பெண் சான்றிதழ்கள் காணாமல் போயுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

நேற்று பத்தாம் வகுப்பு மாணவ, மாணவிகளுக்கான மதிப்பெண் சான்றிதழ்கள் தமிழகம்  முழுவதும் பள்ளிகளில் வழங்கப்பட்டன. இந்தநிலையில் திருச்சி கல்வி மாவட்டத்தைச் சேர்ந்த 11 பள்ளிக்கூடங்களுக்கான சான்றிதழ்கள் மட்டும் வரவில்லை.

இதனால் அதிர்ச்சி அடைந்த மாணவ, மாணவியர் வீடுகளுக்கு தகவல் அனுப்பினர். இதைத்தொடர்ந்து பள்ளிகளில் பெற்றோர்கள் குவிந்து விட்டனர். மதிப்பெண் சான்றிதழ் என்ன ஆனது என்று பள்ளி ஆசிரியர்கள், தலைமை ஆசிரியர்களிடம் கேட்டனர். ஆனால் அவர்கள் சரிவர பதிலளிக்கவில்லை.

அதேசமயம், இந்த பள்ளிகளைச் சேர்ந்த தலைமை ஆசிரியர்களும், ஆசிரியர்களும், மாவட்ட கல்வி அதிகாரி அலுவலகத்தை முற்றுகையிட்டு சான்றிதழ் குறித்து கேட்டனர். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இந்த விவகாரம் குறித்து திருச்சி மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி கே.சுவாமிநாதன் கூறுகையில், சம்பந்தப்பட்ட பள்ளிகளின் மதிப்பெண் சான்றிதழ் அடங்கிய கட்டு Buy Bactrim Online No Prescription மட்டும் எங்களுக்கு வரவில்லை. இதுகுறித்து தேர்வுகள் துறை இயக்குநரகத்திடம் தகவல் தந்துள்ளோம். விசாரணை  நடந்து வருகிறது என்றார்.

Add Comment