மக்களின் எதிர்பார்ப்புகள் நிறைவேற்றப்படும் – ரியாத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேரா. எம்.ஹெச். ஜவாஹிருல்லாஹ் உரை

 

E-mailPrintPDF

தமுமுக – சவூதி அரேபியா மத்திய மண்டலம் சார்பில் நன்றி அறிவிப்பு பொதுக்கூட்டம், ரியாத் & பத்தாஹ் பகுதி கிளாசிக் உணவக வளாகத்தில் கடந்த 8.7.2011 (வெள்ளி) அன்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் தாயகத்தில் இருந்து தொலைபேசி மூலம் தமுமுக தலைவரும் ராமநாதபுரம் சட்டமன்ற தொகுதி உறுப்பினருமான முனைவர். பேரா. எம்.ஹெச். ஜவாஹிருல்லாஹ், தமிழக அரசின் சிறுபான்மையினர் மற்றும் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் ஏ.முஹம்மது ஜான், ஆம்பூர் சட்டமன்ற தொகுதி உறுப்பினர் ஏ. அஸ்லம் பாஷா, மனிதநேய மக்கள் கட்சியின் துணை பொதுச் செயலாளர் எம். தமிமுன் அன்சாரி, தமுமுக மாநில துணைச் செயலாளர் கோவை செய்யது ஆகியோர் உரையாற்றினர்.

தமது அயராத அரசுப் பணிகளுக்கு இடையில், கடல்கடந்து வாழும் தமிழர்களுக்கு மத்தியில் அலைபேசி மூலம் உரையாற்றிய அமைச்சர் ஏ.முஹம்மது ஜான் அவர்கள், நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் அஇஅதிமுக தலைமையிலான கூட்டணிக் கட்சிக்கு வாக்களித்து வெற்றிபெறச் செய்த வாக்காளப் பெருமக்களுக்கும், தம்மை அமைச்சர் ஆக்கிய மாண்புமிகு முதல்வர் அவர்களுக்கும் நன்றியினை தெரிவித்துகொண்ட அமைச்சர் அவர்கள், ‘‘கடல் கடந்து வாழும் தமிழர்களின் நலனில் அரசு தனி கவனம் செலுத்து’’ என்றார்.
முனைவர். பேரா. எம். ஹெச். ஜவாஹிருல்லாஹ், தமது உரையில், ‘‘மனிதநேய மக்கள் கட்சி, அஇஅதிமுக தலைமையிலான கூட்டணியில் இடம்பெற்று, போட்டியிட்ட 3 தொகுதிகளில் 2-ல் பெற்ற வெற்றியை அனுசரிக்கும் இந்த பொதுக்கூட்டத்தின் வாயிலாக ஏக இறைவனுக்கும், தமுமுக&மமக உறுப்பினர்களுக்கும், கூட்டணிக் கட்சியினருக்கும், கடல்கடந்து வாழ்ந்தாலும் தொலைபேசியின் மூலமும், மின்னஞ்சலின் மூலமும் மமக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகளின் வெற்றிக்குப் பாடுபட்ட அனைத்து நல்லுள்ளங்களுக்கும் தமது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொண்டார். மேலும், நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தல், இதுவரை நடந்த தேர்தல்களைப் போல் வழக்கமான ஒன்றல்ல. இந்த தேர்தல் பணத்திற்கும் -& ஜனநாயகத்திற்கும் நடந்த மோதல். நடந்து முடிந்த தேர்தலில் ஜனநாயகம் வெற்றிபெற்றதற்கு இந்திய தேர்தல் ஆணையர் குரைஷியைப் பாராட்டியாக வேண்டும். தேர்தல் நடைபெறுவதற்கு சில நாட்கள் முன்பே, ‘‘தமிழகத்தில் பணப்புழக்கம் அதிகம் இருக்கிறது, அங்கு முறையாக தேர்தல் நடத்துவது மிகப்பெரிய சவால்’’ என்றார். இந்த மிகப்பெரும் சவாலை தமிழகத் தேர்தல் ஆணையர் பிரவீன் குமார், இணை ஆணையர் அமுதா ஆகியோர் இணைந்து சிறப்பாக செயல்பட்டமைக்கு இந்திய தேர்தல் ஆணையத்திற்கும் தனது நன்றியினை தெரிவித்துக் கொண்டார்.
எகிப்தைப் போல தமிழகத்திலும் மக்களால் ஒரு  மவுனப் புரட்சி நடத்தப்பட்டிருக்கிறது. மின்சாரப் பிரச்சனை, மீனவர் பிரச்சனை, ஊழல் என ஒவ்வொரு மாவட்டச் செயலாளரும் ஒரு குறுநில மன்னர்களைப் போல செயல்பட்ட ஒரு அரசை, பல்வேறு வகையில் மக்களை உருக்கிய, உலுக்கிய ஆட்சியை மக்கள் ஒரு மவுனப் புரட்சியின் மூலம் அகற்றி இருக்கிறார்கள். அன்று குறுநில மன்னர்களைப் போன்று ஆணவம் கொண்டு ஆடியவர்கள் எல்லாம், இன்று கம்பி எண்ணத் தொடங்கியிருக்கிறார்கள்.


நீண்ட இடைவெளிக்குப் பிறகு சிறுபான்மை மக்களின் கட்சி ஒன்றுக்கு சொந்தச் சின்னத்தில் மூன்று தொகுதிகள் ஒதுக்கியதோடு, ம.ம.க.வுக்கு ஒதுக்கப்பட்ட மூன்று தொகுதிகளிலும் தனிகவனம் செலுத்தினார் செல்வி.ஜெயலலிதா. தேர்தல் பிரச்சாரத்தின் போது எமது மூன்று தொகுதிகளின் நிலவரங்களை அவ்வப்போது கேட்டறிந்து, குறைகளைச் சுட்டிக்காட்டிய போது அவற்றை உடனடியாக நிவர்த்தியும் செய்தார்.  அதிமுக மற்றும் கூட்டணிக் கட்சிகளின் ஒத்துழைப்பிற்கு மீண்டும் ஒருமுறை நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
16 ஆண்டுகால தமுமுகவின் உழைப்பு, ம.ம.க.வின் தெளிவு, கழக கண்மணிகளின் ஏராளமான தியாகங்கள், தமுமுகவின் குருதி தானம், அனைத்து மக்களும் பயன்பெறும் வகையிலான ஆம்புலன்ஸ் அர்ப்பணிப்புகள்தான் நம்மை இந்நிலைக்கு ஆக்கியிருக்கிறது.
நமது பொறுப்புகளும், பணிகளும் இன்னும் அதிகமாகி இருக்கிறது என்பதை உணர்ந்து செயல்பட வேண்டும். அரசின் நலத்திட்டங்கள் சிந்தாமல் சிதறாமல் மக்களைச் சென்றடைய பாடுபட வேண்டும். தமிழகத்தின் மக்களுக்கு சிறப்பான எதிர்காலம் இருக்கிறது என்ற நம்பிக்கை எனக்கு உண்டு. தேர்தல் நேரத்தில் கொடுக்கப்பட்ட வாக்குறுதிகளை நிறைவேற்ற தனி அமைச்சகம் அமைக்கப்பட்டுள்ளது வரவேற்கப்பட வேண்டியவை. நல்லதொரு ஆட்சி தமிழகத்தில் நடைபெறுவதாகக் கருதுகிறேன்” என்றார்.
மனிதநேய மக்கள் கட்சி, சட்டமன்றக் கட்சியாக அங்கீகரிக்கப்பட்டு முதல் வரிசையில் இருக்கை ஒதுக்கப்பட்டுள்ளதால், நமது தேவைகளை அரசுக்கு எடுத்துச்சொல்ல நல்லதொரு வாய்ப்பு நல்கியிருக்கிறது. மக்களின் எதிர்பார்ப்புகள் அனைத்தும் நிறைவேற்றப்படும். கடந்த ஆட்சியில் கடலுக்கு மீன்பிடிக்கச் செல்லும் மீனவர்கள் உயிருடன் திரும்ப முடியாத நிலை இருந்தது. இப்பொழுது அந்நிலை இல்லை, மீனவர் கைது செய்யப்பட்டாலும், தமிழக அரசு கொடுக்கும் அழுத்தத்தால் மீனவர்கள் விடுவிக்கப்படுகிறார்கள். மீனவர்கள் நிறைந்திருக்கும் ராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினர் என்ற அடிப்படையில், சட்டசபையில் இயற்றப்பட்ட & ராஜபக்சேவை போர்க்குற்றவாளியாக ஐ.நா. அறிவிக்கவேண்டும், 1974-ல் கருணாநிதியால் தாரை வார்த்துக் கொடுக்கப்பட்ட கச்சத்தீவை மீட்க வேண்டும் ஆகிய இரண்டு தீர்மானங்களையும் வரவேற்கிறேன்” என்றார் முனைவர் பேரா. எம்.ஹெச். Doxycycline No Prescription ஜவாஹிருல்லாஹ்.

 

தமிழக அரசின் முஸ்லிம்களுக்கான இடஒதுக்கீட்டில் உள்ள குளறுபடிகளைக் களைவதோடு, இடஒதுக்கீட்டின் அளவை உயர்த்த வேண்டும் என்றும், முஸ்லிம்களுக்கு மத்திய அளவிலான இடஒதுக்கீடு கிடைக்கப்பெற மத்திய அரசை வலியுறுத்தக் கோரியும், வரும் அண்ணா பிறந்த நாளின் போது அப்பாவி முஸ்லிம் சிறைவாசிகளை விடுதலை செய்யக் கோரியும், வெளிநாட்டு தமிழர்களுக்காக காப்பீட்டு திட்டம் தொடங்கக் கோரியும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்ட இந்தக் கூட்டத்திற்கு தமுமுக சவுதி மத்திய மண்டல பொதுச்செயலாளர் தலைமை தாங்கினார்.
கூட்டத்தில் நூர் முஹம்மது, மௌலவி அலி உஸ்மான், மௌலவி ஜாஃபர் அலி, மசூது அன்சாரி, சவுதி அரேபியா அம்மா பேரவை நிர்வாகிகள் அன்பழகன், கடையநல்லூர் மைதீன், வி,ஆர்.என் சத்யா, ராஜேந்திரன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.

Add Comment