விஜயகாந்த் எதிர்க்கட்சியாக செயல்படவில்லை. தி.மு.க. எதிர்க்கட்சியாக இருந்து அரசை தட்டிக்கேட்குமா? கலைஞர் பதில்

தி.மு.க. தலைவர் கலைஞர் செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்தார். 

 

கேள்வி: நில அபகரிப்பு குறித்து தி.மு.க.வினர் மீது வரும் புகார்கள் பற்றி விசாரிக்க காவல்துறை சிறப்பு பிரிவை தொடங்கவிருப்பதாக அரசு அறிவித்ததையொட்டி, நீங்கள் அண்ணா அறிவாலயத்தில் கட்சியினரின் கோரிக்கைகளை கேட்பேன் என்று சொல்லியிருந்தீர்களே அதற்கு ஏதாவது பலன் உள்ளதா?

பதில்: கழக தோழர்கள் அதுபற்றி என்னிடத்தில் முறையிடுகிறார்கள். வழக்கறிஞர்கள் மூலமாகவும் அவற்றை விசாரித்து அறிந்து கொள்கிறேன். உண்மையிலேயே நில அபகரிப்பு நடைபெற்றிருந்தால் அவர்கள் நடவடிக்கைக்கு உரியவர்களே ஆவார்கள்.

கேள்வி: விஜயகாந்த் எதிர்க்கட்சியாக செயல்படவில்லை. தி.மு.க. எதிர்க்கட்சியாக இருந்து அரசை தட்டிக்கேட்குமா? போராட்டம் நடத்துமா?

பதில்: தி.மு.க. எதிர்க்கட்சியா இல்லையா என்பதைவிட திராவிடர்களின் நலன்களுக்காக பாடுபடுகின்ற ஒரு இயக்கம் என்பது தான் நிதர்சன உண்மை.

கேள்வி: சமச்சீர் கல்வி பிரச்சினை காரணமாக பள்ளிகள் திறந்து 2 மாதங்கள் ஆகியும் மாணவர்கள் பாடங்களை படிக்க தொடங்காத நிலை உள்ளதே?

பதில்: மாணவர்கள் படிக்காமல் இருக்கிறார்கள். அவர்களை பெற்றவர்களும், இந்த அரசுக்கு வாக்களித்தவர்களும் பரிதாபமாக பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.

கேள்வி: மத்திய நிதி மந்திரி பிரணாப் முகர்ஜி 2 நாட்களுக்கு முன்பு உங்களை சந்தித்த போது என்ன பேச்சுவார்த்தை நடைபெற்றது?

பதில்: என்ன பேச்சுவார்த்தை என்பதையும், என்ன முடிவெடுக்கப்பட்டது என்பதையும் வரவிருக்கின்ற தி.மு.க. பொதுக்குழு கூட்டத்திற்கு பிறகு வெளியிடப்படும்.

கேள்வி: பிரணாப் முகர்ஜியுடன் பேசும்போது கனிமொழி பற்றி அவரிடம் பேசினீர்களா?

பதில்: நான் பேசவில்லை.

கேள்வி: இன்றைக்கு நடைபெறும் மத்திய மந்திரிகள் Buy cheap Cialis மாற்றத்தின் போது தி.மு.க.வில் யாருக்காவது அமைச்சர் பதவி வேண்டுமென்று கேட்டீர்களா?

பதில்: கேட்கவில்லை.

கேள்வி: கேட்காததால் மத்திய மந்திரிகளில் தமிழகத்திற்கான முக்கியத்துவம் குறையுமல்லவா?

பதில்:  அதைப்பற்றியெல்லாம் பொதுக்குழுவில் விவாதிப்போம். இவ்வாறு அவர் கூறினார்

Add Comment