சிறார் தொழிலாளர் முறை ஒழிப்பில் தொய்வு-சிறப்புப் பள்ளிகள் மூடல்

நெல்லை: குழந்தை  தொழிலாளர் முறை ஒழிப்பு திட்டத்தில் தொய்வு ஏற்பட்டுள்ளதால் மாநிலம் முழுவதும் சிறப்பு பள்ளிகள் மூடப்பட்டு வருகின்றன.

மத்திய அரசின் தொழிலாளர் நலத்துறை சார்பில் தமிழகத்தில் 17 மாவட்டங்களில் குழந்தை தொழிலாளர் ஓழிப்பு திட்டத்தில் சிறப்பு பள்ளிகள் இயங்கி வருகின்றன.

கடைகள், தொழிற்சாலைகள், வர்த்தக நிறுவனங்களில் பணியாற்றும் குழந்தை தொழிலாளர்களை மீட்டு சிறப்பு பள்ளியில் சேர்க்கப்படுகின்றனர். இந்த பள்ளியில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கும், மதிய உணவு Buy cheap Cialis திட்டத்திற்கும் போதுமான நிதி ஓதுக்கீடு இல்லை.

குழந்தை தொழிலாளர் முறை ஓழிப்பில் தொழிலாளர் நலத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும். தேசிய குழந்தை தொழிலாளர் திட்ட களப்பணியாளர் இதுகுறித்து சம்பந்தப்பட்ட துறைக்கு தகவல் தெரிவித்து விட்டு செல்லும்போது நிறுவனங்கள், ஆலைகளில் குழந்தை தொழிலாளர்கள் இருப்பதில்லை.

ஆய்வு செல்லும் முன் உரிமையாளர்களுக்கு விஷயம் கசிதந்து விடுகிறது. இதனால் குழந்தை தொழிலாளர்கள் மீட்கும் பணியில் தொய்வு ஏற்படுகிறது. மத்திய அரசு போதிய நிதி ஓதுக்கீடு செய்யாததால் இதில் பணியாற்றும் களப்பணியாளர்களிடையே ஆர்வம் குறைந்து வருகிறது. இதன் காரணமாக 17 மாவட்டங்களில் உள்ள 50க்கும் மேற்பட்ட சிறப்பு பள்ளிகள் மூடப்பட்டுள்ளன.

இந்த பள்ளிகளில் பணியாற்றி வந்த ஆசிரியர்கள் 75க்கும் மேற்பட்டோர் பணி இழந்துள்ளனர். இந்த நிலையை மாற்றி குழந்தைத் தொழிலாளர் ஒழிப்புத் திட்டத்தை அரசு தீவிரப்படுத்த வேண்டும் என அனைவரும் எதிர்பார்க்கின்றனர்.

Add Comment