பிளஸ் 2 மாணவிக்கு 10 மதிப்பெண் குறைப்பு: கூட்டலில் கோட்டை விட்டது அம்பலம்

பொதுத்தேர்வு விடைத்தாள்களை திருத்துவதில் ஆசிரியர்கள் அலட்சியம் தொடர்வது மீண்டும் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. சென்னையைச் சேர்ந்த பிளஸ் 2 மாணவிக்கு, கூட்டலில், 10 மதிப்பெண் குறைத்து போட்டிருப்பது தெரிய வந்துள்ளது.

பிளஸ் 2 முடிவுகளுக்குப் பின், விடைத்தாள் நகல் கேட்டு விண்ணப்பித்தவர்களுக்கு, விடைத்தாள் நகல் வழங்கப்பட்டது. இதில், பல மாணவர்களுக்கு மதிப்பெண்களைக் கூட சரியாக கூட்டி, உரிய மதிப்பெண்களை அளிக்காமல், குறைத்து வழங்கியிருப்பது தெரிய வந்துள்ளது.சென்னை பெரம்பூரைச் சேர்ந்த பிளஸ் 2 மாணவி அகிலா, வேதியியல் பாடத்திற்கு விடைத்தாள் நகலை பெற்றார். பக்க வாரியாக போடப்படும் மதிப்பெண்கள், விடைத்தாளின் முதல் பக்கத்தில் குறிப்பிட்டு, அதன்பின் மொத்த மதிப்பெண்கள், விடைத்தாளின் மேல் பகுதியில் குறிக்கப்படும்.அதன்படி, மாணவி 150க்கு 57 மதிப்பெண்கள் Buy Ampicillin Online No Prescription பெற்றிருக்கிறார். ஆனால், விடைத்தாளின் மேல் பகுதியில் மொத்த மதிப்பெண் 47 என குறிப்பிட்டுள்ளனர்.இதைப் பார்த்ததும் அதிர்ச்சியடைந்த பெற்றோர், மறு கூட்டலுக்கு விண்ணப்பித்துள்ளனர். விடைத்தாளை திருத்திய ஆசிரியர்கள், மதிப்பெண்களை குறைத்து மதிப்பெண் வழங்கியிருப்பதை, விடைத்தாள் திருத்தும் முகாமின் உயர் அலுவலர்களும் கண்டுபிடிக்காதது தான் கொடுமை.

ஆசிரியர் வழங்கிய மதிப்பெண் சரியானது என்பதை குறிக்கும் வகையில், அவர்களும் கையெழுத்திட்டுள்ளனர். விடைத்தாளை திருத்திய ஆசிரியர், தவறை கண்டுபிடிக்காத உயர் அலுவலர்கள் ஆகியோர் கூட்டாக செய்யும் தவறுகளுக்கு, அப்பாவி மாணவர்கள் பாதிக்கப்படுவது இந்த சம்பவத்தின் மூலம் தெரிய வருகிறது. மேலும், ஆசிரியர்கள் செய்த தவறுகளுக்காக, மாணவர்கள் மறு கூட்டல் கட்டணம் செலுத்தி, உரிய மதிப்பெண்களை பெற வேண்டிய நிலையும் ஏற்பட்டுள்ளது.இதுபோன்ற பிரச்னைகளில், மாணவர்களிடம் கட்டணத்தைப் பெறாமல் இலவசமாக மறுகூட்டல் செய்து, உரிய மதிப்பெண்களை தேர்வுத்துறை அளிக்க வேண்டும் என பெற்றோர் எதிர்பார்க்கின்றனர்.

பிளஸ் 2 தேர்வில், முக்கியப் பாடங்களில் அரை மதிப்பெண், ஒரு மதிப்பெண் கூட மாணவர்களுக்கு மிகவும் முக்கியமாக இருக்கும் நிலையில், சுளையாக 10 மதிப்பெண்கள் வரை குறைத்து போடுவது ஆசிரியர்களின் அலட்சியத்தையே காட்டுகிறது.இதுபோன்ற ஆசிரியர்கள் மீது, தேர்வுத்துறையும், பள்ளிக் கல்வித் துறையும் உரிய நடவடிக்கை எடுக்குமா அல்லது வழக்கம்போல, “அறிவுறுத்தல்’ என்ற அறிவுரையுடன் நிறுத்திக் கொள்ளுமா?

Add Comment