ரமலான் நோன்பு: தமிழக அரசின் சார்பில் அரிசி வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.

ரமலான் நோன்பை ஒட்டி, பள்ளிவாசல்களில் கஞ்சி தயாரிப்பதற்கு தமிழக அரசின் சார்பில் அரிசி வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.

இதுகுறித்து, உணவுத் துறை புதன்கிழமை வெளியிட்ட அறிவிப்பு:

ரமலான் மாதம் நோன்பு கடைப்பிடிப்பவர்களுக்கு கஞ்சி தயாரிக்க நபருக்கு, நாளுக்கு 150 கிராம் வீதம் அரிசி வழங்க அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். ரமலான் நோன்பு கடைப்பிடிப்பவர்களுக்கு அனுமதி பெற்ற பள்ளிவாசல்களில் கஞ்சி தயாரிப்பதற்கு தேவையான அரிசிக்குரிய மொத்த அனுமதியை மாவட்ட ஆட்சியர்கள் புதுப்பிப்பார்கள். அவர்களே நேரடியாக அரிசியை பள்ளிவாசல்களுக்கு வழங்குவார்கள்.

ரமலான் நோன்பு கஞ்சி தயாரிக்க 3 ஆயிரத்து 801 டன்கள் அரிசியை தமிழகத்திலுள்ள அனைத்து தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக கிடங்குகளிலும் ஜூலை 29-ம் தேதியன்றே தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும். தமிழகத்தில் அனுமதி பெற்று ஏற்கெனவே இந்த buy Doxycycline online வாய்ப்பினை பயன்படுத்தி வரும் பள்ளி வாசல்கள் மொத்த அனுமதியை புதுப்பித்து மாவட்ட ஆட்சியரிடம் பெற்றுக் கொள்ளலாம் என்று உணவுத் துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

Add Comment