மும்பையில் பெய்த கனமழையில் குண்டுவெடிப்புத் தடயங்கள் அழிந்தன

மும்பையில் நேற்று இரவு நடந்த தொடர் குண்டுவெடிப்புச் சம்பவங்கள் நடந்த இடங்களில், கன மழை பெய்த காரணத்தால், பல முக்கிய தடவியல் அடையாளங்கள் நீரில் அடித்துப் போய் விட்டதாக போலீஸார் கவலை தெரிவித்துள்ளனர்.

நேற்று இரவு முழுவதும் விடிய விடிய மும்பையில் மழை பெய்தது. இன்று காலை வரையிலும் மழை நிற்கவில்லை. குண்டுவெடிப்பு நடந்த 3 இடங்களிலும் தடயங்களை சேகரிக்கும் பணியில் ஈடுபட்ட தடவியல் நிபுணர்கள், முக்கிய அடையாளங்கள், தடயங்கள் மறைந்திருக்கலாம், நீரில் அடித்துப் போயிருக்கலாம் என சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

குண்டுவெடிப்பு நடந்ததுமே அந்த இடத்தை மும்பை போலீஸார் முற்றுகையிட்டு முக்கிய தடயங்கள், ஆதாரங்கள் சேதமடைந்து போய் விடாமல் பார்க்கும் நடவடிக்கைகளை முடுக்கி விட்டனர். மோப்ப நாய்கள் மூலம் வெடிக்காத குண்டுகள் இருக்கிறதா என்பதைக் கண்டறியும் பணிகளில் ஈடுபட்டனர்.

இருப்பினும் கன மழைந்து போலீஸாருக்கு online pharmacy without prescription அச்சத்தை ஏற்படுத்தி விட்டது. குண்டுவெடிப்பு நடந்த இடங்களில் தார்ப்பாய் உள்ளிட்டவற்றைப் போட்டு தடயங்கள் அழிந்து போய் விடாமல் தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. ஆனால் பெய்த பேய் மழைக்கு அது போதுமானதாக இல்லை. தொடர்ந்து மழை பெய்துவருவதால், தடயங்கள் பல அழிந்து போயிருக்கலாம் என தடயவியல் நிபுணர்கள் அஞ்சுகின்றனர்.

இருப்பினும் நம்பிக்கையை விட்டுவிடாமல் தொடர்ந்து தடயங்களை சேகரிக்கும் பணி நடந்து வருகிறது.

Add Comment