ஐகோர்ட்டில் தமிழ் : மு.க. அழகிரி உறுதி

ஐகோர்ட்டில் தமிழில் வாதாடுவது குறித்து மத்திய சட்ட அமைச்சர் வீரப்பமொய்லியிடம் பேசி 15 நாட்களில் முடிவு காணப்படும்,” என வக்கீல்களிடம் மத்திய அமைச்சர் மு.க. அழகிரி தெரிவித்தார்.

ஐகோர்ட்டில் தமிழில் வாதாட அனுமதி வழங்கக்கோரி, மதுரை ஐகோர்ட் கிளை முன் வக்கீல்கள் தொடர் உண்ணாவிரதம் மேற்கொண்டுள்ளனர். வக்கீல்கள் சங்கங்களின் பிரதிநிதிகள் வெள்ளைச் சாமி, ஏ.கே. ராமசாமி, சுபாஷ்பாபு, சாமிதுரை, மகேந்திரன், தியாகராஜன் உட்பட பலர் நேற்று அழகிரியை சந்தித்து மனு அளித்தனர். அமைச்சர் தங்கம் தென்னரசு, அரசு வக்கீல்கள் மோகன் குமார், குபேந்திரன் கலந்து கொண்டனர்.

அப்போது வக்கீல்களிடம் மு.க. அழகிரி பேசியதாவது: ஐகோர்ட்டில் தமிழில் வாதாடுவது குறித்து மத்திய அமைச்சர் வீரப்பமொய்லியின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டு உள்ளது. தமிழில் வாதாடுவதில் உள்ள நடைமுறை விதிமுறைகள் குறித்து உள்துறை அமைச்சகத்தின் ஆய்வில் உள்ளது. தமிழில் வாதாடுவது குறித்து வீரப்ப மொய்லியிடம் பேசி 15 நாட்களில் முடிவு காணப்படும். எனது பேச்சை நம்பி உண்ணாவிரதத்தை கைவிட வேண்டும், என்றார்.

உண்ணாவிரதத்தை முடித்து வைக்கும்படி அழகிரியை வக்கீல்கள் அழைத்தனர். அவரும் ஒப்புக்கொண்டு ஐகோர்ட்டிற்கு புறப்பட்டார். அழகிரியுடன் நடத்திய பேச்சு வார்த்தை குறித்து, உண்ணாவிரதம் இருக்கும் வக்கீல்களிடம் தெரிவிக்கப்பட்டது. “தமிழில் வாதாடுவது குறித்து மொய்லி உறுதியளிக்க வேண்டும். 15 நாட்களில் முடிவு காணப்படும் என அழகிரி எழுதி கொடுக்க வேண்டும்,’ என அவர்கள் கோரிக்கை வைத்தனர். இதுகுறித்து அறிந்த அழகிரி, ஐகோர்ட்டிற்கு செல்லாமலே வீடு திரும்பினார். “” போராட்டம் குறித்து வக்கீல்கள் buy Ampicillin online சங்கங்களின் பிரதிநிதிகளுடன் பேசி முடிவெடுக்கப்படும்,” என வக்கீல் வெள்ளைச்சாமி நிருபர்களிடம் தெரிவித்தார்.

Add Comment