கடையநல்லூர் நகராட்சியில் ஆமை வேகத்தில் குடிநீர் திட்டப்பணிகள்

கடையநல்லூர் நகராட்சியில் ஆமை வேகத்தில் குடிநீர் திட்டப்பணிகள்

கடையநல்லூர் நகராட்சியில் சுமார் 1 லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் வசித்து வருகின்றனர். இங்கு குடிநீர் திட்டம் செயல்படுத்தப்பட்டு 35 ஆண்டுகளாவதால் பிரதான குடிநீர் குழாய் மற்றும் விநியோக குழாய்களில் உடைப்பு ஏற்பட்டு பொதுமக்களுக்கு சீரான குடிநீர் விநியோ கம் கிடைக்காமல் உள்ளது. இத னால் பொதுமக்கள் அன்றாடம் நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிடுவது உள்பட பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் தமிழக அரசு கடந்த ஆண்டு ஜெர்மன் மேம்பாட்டு நிதி ஆதாரத்துடன் சுமார் 22 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதியகுடிநீர்திட் டத்தை அறிவித்தது. இதற்கான அடிக்கல் நாட்டுவிழா கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் நடந்தது. தொடர்ந்து தமிழ்நாடு குடிநீர் வழங் கல் துறையினரால் புதிய குடி நீர் திட்ட பணிகளுக்கான ஆய்வு பணி மேற்கொள்ளப்பட்டது.

பெரியாறு, கல்லாறு பகுதிகளில் குடிநீர் ஆதாரம் இருக்கும் இடத்தை தேர்ந்தெடுத்து மேலகடையநல்லூர், மாவடிக்கால், கிருஷ்ணாபுரம், முத்துகிருஷ்ணாபுரம் உள்பட 7 இடங்களில் புதிய மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அமைப்பதற்கான இடங் கள் தேர்வு செய்யப்பட்டன.இதற்கான டெண்டர் முடிவடைந்தும் பணிகள் விரைந்து மேற்கொள்ளப்படாமல் கிடப்பில் போடப் பட்டுள்ளன. இதனால்பொதுமக்கள் போதிய குடிநீர் கிடைக்காமல் நீர் Buy Cialis நிலைகளை தேடி அலைந்து வருகின்றனர்.

நகராட்சி நிர்வாகம் தற்காலிக நடவடிக்கையாக டேங்கர் லாரி முலம் பொதுமக்களுக்கு தண்ணீர் சப்ளை செய்து வருகிறது. இருப்பினும் பல இடங்களில் குடிநீர் கிடைக்காமல் அவதிப்படுகின்றனர். எனவே பொதுமக்கள் நலன் கருதி 22 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அறிவிக்கப்பட்ட புதிய குடிநீர் திட்ட பணிகளை விரைந்து முடித்து குடி நீர் பிரச்சனைக்கு நிரந் தர தீர்வுகாணவேண்டும் என பொது மக்கள்அரசைவலியுறுத்தியுள்ளனர்.

நல்லூர்கதிரவன்

Add Comment