கடையநல்லூரின் வளர்ச்சிக்கு நீங்கள் என்ன செய்தீர்கள்?

இரவுப்பேருந்தில் Levitra No Prescription பயணத்தின் போது ஒருவர் மட்டும் ஓட்டுநரிடம் சண்டை போட்டு சிறுநீர் கழிக்க இறங்குவார். அதுவரை அவரை புழுபோல் பார்த்துக் கொண்டிர்ந்தவர்களும் கீழே இறங்கி அதையே செய்து முடிப்பார்கள்.. யாராவது ஒருவர் ஏதாவது செய்வார்கள் என்று எதிர்பார்த்து இருப்பார்கள்.. துயரம் என்னவென்றால் அனைவரும் அதையே நினைப்பதுதான்.

“யாரவது” செய்வார்களா என ஒரு சாரரும், “ஏன் செய்யவேண்டும் என ஒரு சாரரும் இருந்து விடுவதால்..அடுத்த தலைமுறையில் வருபவர்களால் என்ன செய்தீர்கள் என்ற நியாமான‌ கேள்வி எழுப்பப்படும்

இந்த கடையநல்லூர்.org என்ற‌ இணையம் இப்பொழுது வெகுவாக கவனிக்கப்படுகிறது..விவாதிக்கப்படுகிறது..நமது ஊரில் உள்ள பெரும்பான்மையான இளைஞர்களால் தினமும் வாசிக்கபடுகிறது.

எனவே.. இங்கு நீங்கள் எழுதப்போகும் அல்லது குறிப்பிடப்போகும் ஒரு திட்டம் எதிர்காலத்தில் யாராலாவது கவனிக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டு அதன் மூலம் ஒருவர்..ஒரே ஒருவர் பயன் பெற்றாலும் அது சாதனையே.. நமது ஊரின் முன்னேற்றத்திற்கும்,சீரழிவை தடுப்பத்தற்கும் உங்கள் மனதில் உதிக்கும் திட்டங்களை தெரியப்படுத்துங்கள்,அதே நேரம் அத்திட்டங்கள் செயலபடுத்த கூடியவையாக இருந்தால் நலம்.

உங்களது யோசனைகளை கடையநல்லூரின் வளர்ச்சி தொடர்பான எதை குறித்து வேண்டுமானாலும் இருக்கலாம்.

உதாரணமாக:
* மருத்துவ வசதி
* உள்ளூர் தொழில் வாய்ப்புகள்
* பள்ளி/கல்லூரி வசதி
* பெண்கள் பாதுகாப்பு
* கலாச்சார சீரழிவுகள்

தயவுசெய்து இதை ஒரு போட்டியாக எடுத்துக் கொண்டு ஒரு திட்டத்தை இந்த பகுதியில் பின்னூட்டமாக இடுங்கள்..அல்லது இ-மெயிலிலும் அனுப்பலாம்.

(courtesy: Narsim)

Add Comment