ஒபாமாவுக்கு சீனா எச்சரிக்கை

அமெரிக்கா சென்று இருக்கும் தலாய்லாமாவை வெள்ளை மாளிகைக்கு வரும்படி ஜனாதிபதி ஒபாமா அழைப்பு விடுத்து இருந்தார். அவரை சந்தித்து பேசவும் திட்டமிட்டு இருந்தார்.

இதை அறிந்ததும், தலாய்லாமாவை சந்தித்து பேசும் திட்டத்தை ரத்து செய்யும்படி சீனா கேட்டுக்கொண்டது. மீறி சந்தித்தால் அது இருநாடுகளின் நட்புறவை பாதிக்கும் என்றும் சீனா எச்சரித்து உள்ளது.

சீனா அருகில் உள்ள திபெத் தனி நாடாக இருந்தது. அதை சீனா 1959-ம் ஆண்டு தன்னுடன் இணைத்துக்கொண்டது. இதை தொடர்ந்து திபெத்தின் புத்தமதத் தலைவரும், தேசிய தலைவருமான தலாய்லாமா தன் ஆதரவாளர்களுடன் இந்தியாவில் அடைக்கலம் புகுந்தார். அவருக்கு அடைக்கலம் கொடுத்ததால் தான் இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையே போர் மூண்டது.

தலாய்லாமாவை தன் எதிரியாகவும் விடுதலை போராட்ட வீரராகவும் சீனா பார்க்கிறது. அவரை வெளிநாடுகளின் தலைவர்கள் சந்தித்து பேசுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.

தலாய்லாமா இப்போது அமெரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து வருகிறார். அவர் அந்த நாட்டுக்கு சென்றதுமே அவரை அரசாங்க உயர் மட்ட அதிகாரிகள் சந்திக்க கூடாது என்று சீனா எச்சரித்தது. இந்த நிலையில் ஜனாதிபதி ஒபாமா அவரை வெள்ளை மாளிகைக்கு வருமாறு அழைப்பு விடுத்து இருக்கிறார். அவரை சந்தித்து பேசவும் திட்டமிட்டு இருக்கிறார்.

இதை அறிந்ததும் சீனா இதற்கு எதிர்ப்பு தெரிவித்து உள்ளது. இது தொடர்பாக சீன வெளிநாட்டு அமைச்சரக அதிகாரி ஹோங் லி வெளியிட்டு உள்ள ஒரு அறிக்கையில்,

’’தலாய்லாமாவை அமெரிக்க ஜனாதிபதி Buy Viagra Online No Prescription ஒபாமா சந்தித்து பேசுவதை சீனா எதிர்க்கிறது. வெள்ளை மாளிகைக்கு வருமாறு விடுத்த அழைப்பை அமெரிக்கா திரும்பப்பெற வேண்டும். அவரை சந்திப்பதை கைவிட வேண்டும்.

தலாய்லாமாவை வெளிநாட்டு அதிகாரிகள் எந்த நோக்கத்துக்காகவும் சந்திப்பதை நாங்கள் எதிர்க்கிறோம். எங்கள் எச்சரிக்கையையும் மீறி அவரை சந்தித்தால் அது இருநாடுகளின் உறவை பாதிக்கும்’’ என்று கூறியிருக்கிறார்.

Add Comment