கடையநல்லூர் முஸ்லிம் டிரஸ்ட்

கடையநல்லூர் முஸ்லிம் டிரஸ்ட்,கடையநல்லூர் கிளை

கடையநல்லூர் முஸ்லிம் டிரஸ்ட், கடையநல்லூர் கிளையின் சார்பில் 17 .07.2011 ஞாயிற்றுக் கிழமை மாலை 4 .30 மணிக்கு சம்சுல் ஹுதா முஸ்லிம் சங்கம் (அல்லிமூப்பன் தெரு நடு வட்டாரம்) ஹாலில் கல்வி, திருமணம் மற்றும் பள்ளிவாசல் கட்டுமான வகைகளுக்காக உதவித் தொகை வழங்கும் நிகழ்ச்சி கடையநல்லூர் முஸ்லிம் டிரஸ்ட் , ரியாத் நிறுவனத் தலைவர் ஜனாப் பீ. எம். கமால் அவர்களின் தலைமையில் நடைபெற்றது.

ஜனாப் அல்ஹாஜ் மௌலானா மௌலவி பீ. எம். முஹம்மது யூசுப் அவர்கள் கிரா அத ஓத விழா இனிதே துவங்கியது. இவ்விழாவில் ஜனாப் கலுங்கலாத்தன் அப்துல் லதீப், ஜனாப் வானத்தோடு கமருத்தீன்,ஜனாப் அல் ஹாஜ் மௌலானா மௌலவி எஸ். எ. அபூபக்கர் ஆலிம் ஆகியோர் உரையாற்றினார்கள்.

ஜனாப் சொன்னி திவான் மைதீன் ( துணைத் தலைவர் கே. எம். டி ) கே. எம். ஹைதர் அலி, பீ. எ. நாகூர் மீரான் ஆகியோர் முன்னிலை வகித்தார்கள்.
இவ்விழாவில் கீழ் கண்டவர்களுக்கு உதவித் தொகைகள் வழங்கப்பட்டன ;

1 , மலுக்கன் யாசிர் அரபாத் ரூ பத்தாயிரம் (கல்வி உதவித் தொகை )
2 மஸ்ஜித் தக்வா -ரஹ்மானியாபுரம் தெரு ரூ. மூவாயிரம் (பள்ளிவாசல் கட்டிட நிதி)
3 சத்தாம் ஹுசைன் : ரூ. ஐ யாயிரம் (கல்வி உதவித் தொகை)
4 நரையன் ஹசீனா பானு ரூ.ஐயாயிரம் (கல்வி உதவித் தொகை)
5 சேம லெப்பை பெரோஸ் மாலிக் (ரூ. ஐயாயிரம் (கல்வி உதவித் தொகை)
6 ஆத லெப்பை முஹம்மது கோதரி :(ரூ. ஐயாயிரம் (கல்வி உதவித் தொகை)
7 நெயனமேத்தன் மசூதுவின் மூத்த மகள் பாத்துமுத்து ( திருமண உதவித் தொகை)

ஜனாப் கே. எம். ஹைதர் அலி,ஜனாப் பீ. எ. நாகூர் மீரான் ஜனாப் வானத்தோடு கமருத்தீன்,அல் ஆகியோர் உதவித் தொகைகளை கே எம் டி யின் சார்பில் வழங்கினார்கள்.

விழாவிற்கான ஏற்பாடுகளை ஜனாப் தெங்க லெப்பை Viagra online ஜபருல்லாஹ் ,சொன்னி திவான் மைதீன், ஒரட்டி யூசுப் , பக்கீர் தரகன் மஜீத் , மலுக்கன் ஹஸ்புல்லாஹ் ஆகியோர் மிகச் சிறப்பாக செய்திருந்தனர். வந்திருந்த அனைவருக்கும் தேநீர் வழங்கப்பட்டது.

Add Comment