சமச்சீர் கல்வித் திட்ட தீர்ப்பை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் அப்பீல் செய்வோம்- தமிழக அரசு

சென்னை: சமச்சீர் கல்வித் திட்டத்தை நடப்பு ஆண்டில் செயல்படுத்த வேண்டும் என்ற சென்னை உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து அப்பீல் செய்யப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

சமச்சீர் கல்வித் திட்டம் தொடர்பான வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் இன்று பரபரப்பான தீர்ப்பை வெளியிட்டது.

அதில் நடப்பு கல்வியாண்டிலும் சமச்சீர் கல்வித் திட்டமே தொடர வேண்டும். 1ம் வகுப்பு முதல் 10ம் வகுப்பு வரை சமச்சீர் கல்வித் திட்டமே நடைமுறைப்படுத்த வேண்டும். பழைய பாடத் திட்டத்தை செயல்படுத்தக் கூடாது. 22ம் தேதிக்குள் அனைவருக்கும் புத்தகங்களை வழங்க வேண்டும் என அது உத்தரவிட்டுள்ளது.

இதுகுறித்து கருத்து தெரிவித்த தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர் நவநீத கிருஷ்ணன் கூறுகையில், சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மேல் முறையீடு செய்யும் என்று தெரிவித்தார்.

கேவியட் Buy Ampicillin மனு தாக்கல் செய்ய மனுதாரர்கள் முடிவு

அதேசமயம், தமிழக அரசு மேல் முறையீடு மனு தாக்கல் செய்தால், தங்களைக் கேட்காமல் தீர்ப்புஅளிக்கக் கூடாது என்று உச்சநீதிமன்றத்தி்ல் கேவியட் மனு தாக்கல் செய்யவுள்ளதாக சமச்சீர் கல்வி கோரி வழக்கு தொடர்ந்துள்ள மனுதாரர்கள் கூறியுள்ளனர்.

மீண்டும் இழுபறி?

இதன் காரணமாக சமச்சீர் கல்வித் திட்டம் மீண்டும் இழுபறி நிலையாகும் என்ற அபாயம் எழுந்துள்ளது. இதன் காரணமாக மாணவர்களும், பெற்றோர்களும் மீண்டும் கவலையில் மூழ்கியுள்ளனர்.

Add Comment