இந்தோனேசியாவில் கடும் நிலநடுக்கம்-சுனாமி எச்சரிக்கை விடப்பட்டது

இந்தோனேசியாவின் பாபுவா மாகாணத்தில் கடும் நிலநடுக்கம்  ஏற்பட்டுள்ளது. அடுத்தடுத்து நிலநடுக்கம் ஏற்பட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

முதல் நிலநடுக்கம் 6.4 ரிக்டராகவும், அடுத்த பத்து நிமிடங்களில் 7 ரிக்டர் அளவிலான சக்தி வாய்ந்த நில நடுக்கம் ஏற்பட்டதாகவும், பின்னர் 6.3 ரிக்டர் அளவிலான இன்னொரு நிலநடுக்கம் ஏற்பட்டதாகவும் Bactrim No Prescription பூகம்பவியல் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

பாபுவா மாகாணத்தில் பியாக் நகருக்கு 114 கிலோமீட்டர் தென் கிழக்கில் பூகம்பம் ஏற்பட்டது. 2வது ஏற்பட்ட பூகம்பம் சக்தி வாய்ந்ததாக இருந்ததால் சுனாமி எச்சரிக்கை விடப்பட்டது. இருப்பினும் பின்னர் இது திரும்பப் பெறப்பட்டது.

பூகம்பம் காரணமாக ஏற்பட்ட சேதம் குறித்த தகவல்கள் வெளியாகவில்லை. இருப்பினும் சேதம் கணிசமான அளவில் இருக்கலாம் எனத் தெரிகிறது.

Add Comment