‘சமச்சீர்’ தீர்ப்பு..அரசுக்கு தோல்வி அல்ல: கருணாநிதி

சமச்சீர் கல்வி வழக்கில் உயர் நீதிமன்றம் வழங்கியத் தீர்ப்பை, தமிழக அரசு தனக்கு கிடைத்த தோல்வி எனக் கருதக் கூடாது என்று முன்னாள் முதல்வரும், திமுக தலைவருமான கருணாநிதி கருத்து தெரிவித்துள்ளார்.

 

சமச்சீர் கல்வித் திட்டத்தை 1 முதல் 10-ம் வகுப்பு வரை, நடப்பு கல்வி ஆண்டிலேயே செயல்படுத்த வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் திங்கட்கிழமை தீர்ப்பளித்தது.

மேலும், வரும் 22-ம் தேதிக்குள் சமச்சீர் கல்வி பாடப்புத்தகங்களை மாணவர்களுக்கு அளித்திட வேண்டும் என தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

யாருக்கும் வெற்றி – தோல்வி அல்ல..

இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள திமுக தலைவர் கருணாநிதி, “சமச்சீர் கல்வி வழக்கின் தீர்ப்பு Buy Amoxil யாருக்கும் வெற்றி, தோல்வி அல்ல.

இந்த தீர்ப்பை தற்போதுள்ள தமிழக அரசு தங்களுக்கு கிடைத்த தோல்வியாக கருதக் கூடாது.

மாறாக, ஏழை-எளிய நடுத்தர மக்களுக்கும், மாணவர்களுக்கும் கிடைத்த வரப்பிரசாதமாக கருத அரசு கருத வேண்டும்.

வழக்காடியதில் கிடைத்த தோல்வி என்று ஆட்சியினர் கணக்கிடாமல், எதிர்கால புதிய சமுதாயத்துக்கு வழங்கப்பட்ட வழிக்காட்டுதல் என்று எடுத்துக்கொள்ள வேண்டும்.

உச்சநீதிமன்ற கருத்தை கேட்டே சமச்சீர் கல்வி கொண்டு வரப்பட்டது,” என்றார் கருணாநிதி.

Add Comment