கடையநல்லூரில் மது தடுப்பு விழிப்புணர்வு கூட்டம்

கடையநல்லூரில் மது தடுப்பு விழிப்புணர்வு கூட்டம்

கடையநல்லூரில் மது தடுப்பு விழிப்புணர்வு கலந்தாய்வு கூட்டம் நடந்தது.இண்டர்நேஷனல் மனித உரிமைகள், நீதியின் குரல் மனித உரிமைகள் மற்றும் தகவல் பெறும் உரிமை சட்டத்திற்கான அமைப்பு ஆகியன இணைந்து பள்ளியில் படிக்கும் மாணவர்கள் Buy Viagra நலன் கருதி மது தடுப்பு விழிப்புணர்வு கலந்தாய்வு கூட்டம் நடத்தியது.கடையநல்லூர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடந்த கூட்டத்தில் நகர அமைப்பாளர் சாகுல்ஹமீது வரவேற்றார். மாநில அமைப்பாளர் மணிகண்டன், அபுதாஹிர் முன்னிலை வகித்தனர். கடையநல்லூர் இன்ஸ்பெக்டர் ஜெயராம் சிறப்புரையாற்றினார். மாநில ஆட்சிமன்ற உறுப்பினர் அசன்மைதீன், மைதீன்அப்துல்காதர், மேற்கு மாவட்ட அமைப்பாளர் சுடலையாண்டி, நகர துணை அமைப்பாளர் உதுமான் சேட் வாழ்த்தி பேசினர்.

நீதியின் குரல் அமைப்பு சார்பில் மாணவர்கள் சுமார் 700க்கும் மேற்பட்டோரும், பெற்றோர்களும் கலந்து கொண்டனர்.நிகழ்ச்சியில் கடையநல்லூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியை சுற்றி உட்புறம் முட்புதர்கள் சூழ்ந்து காணப்படுவதால் பாம்பு போன்ற பூச்சிகள் இருக்க வாய்ப்புள்ளது. எனவே மாணவர்கள் நலன் கருதி முட்புதர்களை அகற்ற பொதுப்பணித்துறை நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். தென்காசி அரசு மேம்பால பணிகளை விரைவுபடுத்த வேண்டும். சென்னையில் உள்ள ராணுவ முகாம் குடியிருப்பில் சுட்டுக் கொல்லப்பட்ட சிறுவன் தில்சன் மறைவிற்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.தலைமையாசிரியை ஆயிஷாள்பீவி நன்றி கூறினார்.

Add Comment