கடையநல்லூர் பள்ளியில் இருபெரும் விழா

 கடையநல்லூர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் இருபெரும் விழா நடந்தது.கடையநல்லூர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் சுற்றுச்சூழல் விழிப்புணர்வு நாள் விழா மற்றும் பசுமைப்படை தொடக்க விழா ஆகிய இருபெரும் விழா நடந்தது. விழாவிற்கு பள்ளி தலைமையாசிரியர் ஆயிசாள் பீவி தலைமை வகித்து சுற்றுச்சூழல் விழிப்புணர்வு குறித்து பேசினார். முதுகலை தமிழாசிரியர் சண்முகசுந்தரம் வரவேற்றார்.தொழிற்கல்வி ஆசிரியரும் பசுமைப்படை ஒருங்கிணைப்பாளருமான கண்ணன் பிளாஸ்டிக் பொருட்களின் தீங்கு, மரம் வளர்ப்பின் Buy Ampicillin பயன்கள் குறித்து பேசினார். மரம் வளர்ப்பின் முக்கியத்துவம் குறித்து மாணவர்கள் நாடகம் நடித்து காட்டினர்.விழாவில் ஆசிரியர்கள் மோசஸ் தர்மா, மகபூப், கலிலூர் ரகுமான், ஓவிய ஆசிரியர் முகைதீன் கலந்து கொண்டனர். தமிழாசிரியர் கருப்பசாமிநாதன் நன்றி கூறினார்.

Add Comment